(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

போடாதேன்னு!” தென்றல்வாணனின் வார்த்தைகளில் இருந்த காரம் அவன் சொன்ன தோரணையில் இல்லை. ஏன் இப்படி செய்தாய், என்று குழந்தை புகார் சொல்வதுப் போல இருந்தது.

  

இப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கலைங்க. இங்கே வரதை சொன்னா நீங்க வேண்டாம்னு சொல்லிடுவீங்கன்னு சொல்லலை. ஆனாலும் நீங்க யாரு குற்றவாளின்னு கண்டுப் பிடிக்கலை. நான் இங்கே வந்ததால தான் கண்டுப்பிடிக்க முடிஞ்சது!!!

  

அப்படி எல்லாம் பெருமை பீத்திக்காதே. ஹாஸ்பிட்டல் கேம்ப்ல இருந்தப்போவே எனக்கு சந்தேகம் இருந்துச்சு. இன்னைக்கு பந்தோபஸ்த் போயாகனும். வந்து டீல் செய்யலாம்னு வச்சிருந்தேன். நீ அதுக்குள்ளே போய் மாட்டிப்பேன்னு எனக்கு என்ன தெரியும்”

  

உங்களுக்கும் முன்னாடியே தெரியுமா! சக்தி மாதிரியே சொல்றீங்க???”

  

அதை விடு! எவ்வளவு பெரிய ஆபத்துல நீ மாட்டி இருந்தேன்னு உனக்குப் புரியுதா? உனக்கு ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா?” தென்றல்வாணனால் இப்போதும் கோபமாக கேட்க முடியவில்லை. அவனுடைய குரல் நெகிழ்ந்து ஒலித்தது.

  

சத்யா சிரித்தாள்.

  

அதான் ஒன்னும் ஆகலையேங்க. உங்களை அவ்வளவு ஈசியா நான் ஃப்ரீயா விட்ருவேனா? இன்னும் ஒரு அம்பது வருஷமாவது உங்க கூடவே இருந்து கொடுமை செஞ்சே தீருவேன். பயப்படாதீங்க!”

  

மலர்ந்திருந்த சத்யாவுடைய முகத்தை பார்ப்பது தென்றல்வாணனுக்கு தனி தெம்பை கொடுத்தது.

  

இன்னொரு தடவை இப்படி செய்யாதே சத்யா!” அவனின் குரல் மென்மையாக ஒலித்தது.

  

நெக்ஸ்ட் டைம் இப்படி செய்ய மாட்டேன். கவனமா இருக்கேன்!!!!!”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.