(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

உள்ளே வந்த சக்தியை பாரத்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். இருந்தாலும் மிருகமாக ரௌத்ரத்துடன்  அவள் பக்கம் கத்தியுடன் பாய்ந்தான். சக்தியின் வயிறு, தோள், கை, மார்பு என பல இடங்களில் அவனின் கத்தி  காயம் ஏற்படுத்தியது.

  

ஆனால் பயிற்சிப் பெற்ற போலீஸ் என்பதால் சவீதாவைப் போல துவளாமல் வலியைப் பொறுத்துக் கொண்டு அவனுடன் மோதினாள் சக்தி. பிரசாத்திற்கு உடல் பலம் இருந்தது. ஆனால் சக்திக்கு அவனை சமாளிக்கும் வழி முறை தெரிந்திருந்தது.

  

சத்யா, நீயும் அஹல்யாவும் பின்னாடி கதவை திறந்துப் போங்க. போய் பக்கத்துல ஹெல்ப் கூப்பிடுங்க. போங்க!” சக்தி கத்தினாள்.

  

கத்திப் பட்ட இடங்களில் ரத்தம் சொட்ட நின்ற சக்திக்கும் உதவ வேண்டும் என்ற முடிவுடன் பயத்தை உதறி விட்டு சத்யா எழுந்தாள்.

  

பிரசாத் சக்தியை கீழே தள்ளி விட்டு சத்யாவை தடுக்க முயற்சி செய்தான் ஆனால் அது நடக்கவில்லை. சக்தி அவனை அசையாமல் பிடித்துக் கொண்டாள்.

  

அஹல்யா உனக்கு தான் கதவு எங்கே இருக்குனு தெரியும். சீக்கிரம் வா!” சத்யா அஹல்யாவிடம் சொன்னப் போது போலீஸ் சைரன் அலறல் கேட்டது!!!

  

🌼🌸❀✿🌷

   

டுத்த ஒரு மணி நேரம் அந்த இடத்தில் ஒரே கலவரமாக இருந்தது.

  

தென்றல்வாணன் தலைமையில் போலீஸ் அங்கே வந்து சேர்ந்தப் போது சக்தி பிரசாத்தை பிடித்து வைத்திருந்தாள்.

  

அவளுக்கும் சவீதாவிற்கும் அடிப் பட்டிருப்பதை பார்த்து ஆம்புலன்ஸ்க்கு மொபைலில் தகவல் சொன்னான் தேன்.

  

முதலுதவி செய்ய வந்த அபினவிடம் முதலில் சவீதாவிற்கு உதவ சொல்லி விட்டு சத்யா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.