“என்னது நெக்ஸ்ட் டைமா??” உண்மையான கோபத்துடன் தென்றல்வாணன் கேட்டான்.
கண் சிமிட்டி சிரித்தாள் சத்யா.
“நான் போய் சக்தியை பார்க்குறேன். பாவம் அவ. அந்த கிறுக்கு டாக்டர் கன்னாபின்னான்னு நிறைய இடத்துல அவளை கத்தியால குத்திட்டான்.”
🌼🌸❀✿🌷
கான்ஸ்டபிளுடன் போன சக்தி அங்கே எமர்ஜன்சி டாக்டராக சாந்ததுரை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
“நீங்களா?”
“என்ன லேடி ராம்போ கோலம் இது?” சாந்ததுரை சக்தியை மேலும் கீழும் பார்த்தான்.
முதல் முறையாக கத்திப் பட்டு ஆங்காங்கே கிழிந்திருந்த உடை சக்தியின் கவனத்தில் பட்டது.
“நீங்க வேண்டாம். வேற டாக்டர் இல்லையா?”
“அநியாயம் செய்றீங்க சக்தி. உங்களுக்கு ஃபர்ஸ்ட் எய்ட் கொடுக்கும் பாக்கியம் கிடைச்சிருக்குன்னு ஓடோடி வந்தேன். ஏமாத்தாதீங்க!”
சாந்ததுரை ஒரு அடி எடுத்து வைக்க, சக்தி நாலடி பின்னே சென்றாள்.
“எனக்கு ஒன்னும் இல்லை SD. நான் வேற டாக்டர் கிட்ட போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்குறேன்!”
“என்னை ரொம்ப இன்சல்ட் செய்றீங்க சக்தி!”