”ப்ச் மூர்த்தி பேச்சைக் கேட்டு நீ மாறனுமா அவனை மாத்த வேண்டியதுதானே“
”நானும் அப்படி நினைச்சேன், சரி அவரை கல்யாணம் செய்துக்கிட்டு மனசை மாத்தலாம்னு, ஆனா அப்படி செய்ய எனக்கு மனசு வரலை மாமா, வெறுப்புதான் வந்தது, முதல் முறை நான் ஆசைப்பட்ட மூர்த்தியை எனக்கு பிடிக்காம போயிடுச்சி”
”அப்போ என்னை பிடிச்சிருக்கா உனக்கு”
”சொல்லத் தெரியலை மாமா ஆனா நீங்கதான் எனக்கு ஏத்தவர்ன்னு உலகமே சொன்னதை வைச்சிப் பார்த்தப்ப”
”பார்த்தப்ப”
”நான் மூர்த்தியை விட்டது மேல்ன்னு தோணுது மாமா”
”அவசரப்பட்டு முடிவு எடுக்காத, இது வாழ்க்கை, நினைச்சா வேணாம்ங்கறது நினைச்சா வேணும்ங்கறது, இதெல்லாம் கொஞ்சம் நிதானமா யோசிச்சி முடிவு எடுக்கனும், அவன் சொன்னதை வைச்சி நீ என்கிட்ட வந்த, நாளைக்கே நான் எதையாவது சொன்னா உடனே அவன்கிட்ட போயிடுவியா”
”மாமா நீயா இப்படி பேசறது”
”பேச வேண்டிய இடத்தில நீ என்னை நிப்பாட்டிட்ட”
”என்னை சந்தேகப்படறியா மாமா”
”ஆமாம்”
”அதுவும் சரிதான், என்னை நம்பனும்னு உங்களுக்கு என்ன தலையெழுத்து, ஆனாலும் சொல்றேன் மாமா உண்மையாவே நான் மனம் திருந்தி உங்ககிட்ட வந்திருக்கேன், இனி