”போடி அப்படி, உன்னால என் வீட்டு மானம் மரியாதைதான் போச்சி, இப்போ சந்தோஷமும் போயிடுச்சி, இப்ப உனக்கு சந்தோஷம்தானே வாழ்ந்துக்கம்மா வாழ்ந்துக்க, மகாராணி போல வாழ்ந்துக்க” என கண்ணீருடன் சொல்லிவிட்டு தன் மகனைப் பார்த்து ஏன் என்பது போல் சைகை செய்ய அவனோ கைகூப்பி மன்னிப்பு கேட்பது போல் நிற்க, அதைக்கண்டு நொந்தபடியே அந்த அறையை விட்டு வெளியேற அங்கு வீரசிங்கம் தயாராக காத்திருந்தார்
”போதுமா” என சொல்ல அவர் உடனே தன் கணவரை கட்டியணைத்து ஓவென அழத்தொடங்க மனைவியை குழந்தையை போல தட்டிகிட்டி சமாதானம் செய்தார் வீரசிங்கம்.
தாயின் அழுகுரல் கேட்டு வேங்கையன் பதறிக் கொண்டு வர வீரசிங்கம் தன் கையால் சைகை செய்து அவனை நிப்பாட்டிவிட்டு
”இவள் என் பொண்டாட்டி, அவளை பார்த்துக்க எனக்குத் தெரியும் நீ வராத, போ போய் உன் பொண்டாட்டியை பார்த்துக்க, பெத்தவங்களை இப்படி அழவைச்சி பார்க்கிறியே உன்னோட சந்தோஷம் ரொம்ப நாளுக்கு நிலைக்காது, கிடைக்கற நாளுக்குள்ள சந்தோஷப்பட்டுக்க” என வெறுப்பாக சொல்லிவிட்டு தன் மனைவியுடன் திரும்பி தன் அறைக்குச் செல்ல முனைய மஹதி தன் பெற்றோருடன் நின்றிருந்தாள், நடந்ததை ஓரளவு ஊகித்துக் கொண்டவள் வீரசிங்கத்திடம்
”நாங்க ஊருக்கு போறோம்” என்றாள் வார்த்தையில் அழுத்தம் இல்லை, அவளே பலவீனமாக இருந்தாள்.
கண்ணீருடன் அவர்களைப் பார்க்க மங்களத்தால் அவளை ஏறிட்டுப் பார்க்க இயலாமல் தலை தாழ்த்திக் கொண்டு தன் அறை நோக்கி விறுவிறுவென நடந்து சென்றுவிட்டார், மனைவியின் நிலைமையில்தான் வீரசிங்கமும் இருந்தார், என்ன அவரால் பளிச்சென தன் மனநிலைமையை காட்ட இயலவில்லை, அதனால் தன் மன வேதனையை அடக்கிக் கொண்டு கைகூப்பி
”சந்தோஷம் பத்திரமா போய் வாங்க” என சொல்ல மகேந்திரனோ
”நாங்க இனி வரமாட்டோம், உங்க பேச்சை நம்பி வந்தது என்னோட முட்டாள்தனம், எது