”உங்களுக்குதான் அவரை பத்தி தெரியலை நான் அவருக்கு பல கெடுதல் செஞ்சிருந்தும் கடைசி வரைக்கும் என் கையை விடாம என்னை காப்பாத்தி மறுபடியும் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு பார்த்தீங்கள்ல”
”என்ன செய்றது அது அவனோட பெருந்தன்மை அதை நீ உன் சுயநலத்துக்கு பயன்படுத்திக்கிட்ட பாரு, அங்க நிக்கறடி நீ“
”என்ன நீங்க எப்ப பாரு என்னையே குறை சொல்றீங்க, உங்க மகனோட நான் வாழலைன்னா அப்பவும் என்னையே திட்டினீங்க, இப்ப வாழ வந்திருக்கேன் இப்பவும் என்னையே திட்டறீங்களே, என்னதான் இருக்கு உங்க மனசுல”
”சின்ன மருமகள் இருக்க வேண்டிய இடத்தில இப்ப நீயிருக்க அது தப்பு”
”யாரு மஹதியா அதுசரி அவளுக்கும் உங்க மகனுக்கும் எப்ப கல்யாணம் ஆச்சி அவளைப் போய் சின்ன மருமகள்னு உரிமை பாராட்டறீங்களே”
”அப்படிப்பார்த்தா உனக்கு நடந்த கல்யாணமே செல்லாதுன்னு ஆன பின்னாடி நீ எதை மனசுல வைச்சிக்கிட்டு உரிமை பாராட்டற”
”நேத்து வந்த மஹதிக்காக என்னை வேணாம்னு சொல்றீங்களா”
”மூர்த்திக்காக என் மகனை நீ வேணாம்னு சொன்னியே அதே போலதான் இதுவும்”
”மூர்த்தி சொத்துக்காக என்னை ஏத்துக்க நினைச்சான் அது எனக்குப் பிடிக்கலை, சொத்தை விட உங்க மகனோட மனசு ரொம்ப பெரிசுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்”
”அது உனக்கு இப்பதான் தெரிஞ்சதா, உனக்காக அவன் என்னவெல்லாம் செய்திருப்பான், அப்பலாம் தெரியலையா, உன்கிட்ட எவ்ளோ கெஞ்சியிருப்பான், அப்பலாம் மனசு இரங்கி வராம இப்ப வந்து நின்னா உடனே உன்னை ஏத்துக்கனுமா”