வேங்கையன் இதை எதிர்பார்க்கவில்லை அவன் திணறினான்
”கட்டுங்க மாமா” என அவள் கட்டாயப்படுத்த அவனால் இயலவில்லை. அதை கண்ட ஜானகி குழம்பினாள்
”மாமா என்ன யோசிக்கறீங்க, ஓ நீங்க கட்டின தாலியை நான் கழட்டினேன்ல அந்த கோபமா உங்களுக்கு, நான் செய்தது தப்புதான் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன், எனக்கு தாலி கட்டுங்க மாமா” என சொல்லி உடனே அவனின் காலில் விழப்போக அவன் தள்ளி நின்றான்
”என்ன மாமா தள்ளிப் போறீங்க ஓ நான் உங்க கால்ல விழறது உங்களுக்குப் பிடிக்கலையா சரி பரவாயில்லை மாமா, இந்தாங்க இந்த தாலியை கட்டுங்க” என சொல்ல மங்களமோ
”நினைச்சா கட்டறதுக்கும் நினைச்சா பிரிக்கறதுக்கும் இது என்ன கயிறுன்னு நினைச்சியா தாலி, அதுக்குண்டான மதிப்பை நீ எப்பவோ இழந்துட்ட, இனியா உனக்கு கிடைக்கப் போகுது”
“கிடைக்கும் பாருங்க” என சொல்லியவள் அந்த தாலியை வேங்கையன் கையில் திணித்து
”இந்தாங்க மாமா தாலியை கட்டுங்க மாமா” என கழுத்தை அவன் புறம் நீட்ட அவனோ நடுங்கும் கரத்துடன் அந்த தாலியை பார்த்து பயந்தான்
”கட்டுங்க மாமா” என அவள் அதட்ட அவனால் இயலவில்லை
”ப்ச் கட்டுங்க மாமா” என கோபமாக சொல்ல அவனோ அந்த தாலியை தூர எறிந்து
“என்னால முடியாது”
”ஏன்”
”காரணம் சொல்ல தெரியலை என்னால உனக்கு தாலியை கட்ட முடியலை” என சொல்ல அதற்கு மங்களமோ