”ஏற்கனவே இங்க தீ கொழுந்துவிட்டு எரியுது இவள் பாட்டுக்கு அதுல எண்ணெயை விடப்போறா இன்னும் பத்திக்கிட்டு எரியட்டும், யாராவது என் பேச்சைக் கேட்டாதானே இவள் போய் அவனை அடிச்சா உடனே அவன் மனம் மாறிடுவானா, அதுக்காகவே வீம்பு பிடிச்சில்ல நிப்பான் சே” என அலுத்துக் கொண்டே மங்களைத்தை தேடிச் சென்றார்
மறுபக்கம் மஹதியின் அறையில் அவளது பெற்றோர் இருந்தனர்
”மஹதி இனி நீதான் ஒரு முடிவு எடுக்கனும் பார்த்தல்ல என்ன நடக்குதுன்னு, இனி நீ இங்க இருக்கப் போறியா இல்லை எங்களோட ஊருக்கு வரப்போறியா” என மகேந்திரன் கேட்க மஹதி மௌனமாக இருந்தாள்
”இப்படி பேசாம இருந்தா எப்படிம்மா இனிமேல இங்க நீ இருக்க எந்த உரிமையும் இல்லை, அதையும் மீறி நீ வீம்புக்குன்னு இங்க இருந்தா ஜானகியே போதும், உன்னை கழுத்து பிடிச்சி வெளிய விரட்டறதுக்கு, உன்னோட மானம் மரியாதையாவது காப்பாத்திக்கம்மா நான் சொல்றேன்ல கிளம்பு வா போகலாம்” என சாந்தி சொல்ல மஹதியோ ஆதரவாக தன் தாயின் மடியில் படுத்துக் கொண்டு வேங்கையனை நினைத்து உருகினாள்
”அவர் பாவம்மா என்னதான் ஜானு திரும்பி வந்திருந்தாலும் என்னிக்கிருந்தாலும் ஜானகி மனசு மாறி அவரை விட்டுப் போயிடுவாள்மா“
”அது அவரோட பிரச்சனைம்மா இவ்ளோ நடந்தும் அவரு உன்னை ஏத்துக்கலையே இப்ப கூட ஜானகியைதானே ஏத்துக்கிட்டாரு”
”எனக்கு அதான் கஷ்டமாயிருக்கும்மா”
”இங்க பாரு நீ எதுக்காக இங்க வந்த, உன் தோழிக்கு உதவி செய்யதானே, ஆனா நீ ஒண்ணு செய்ய அதுவா ஒண்ணு நடந்தது, எது எப்படியோ புருஷன் பொண்டாட்டி ஒண்ணு சேர்ந்துட்டாங்க, அப்புறம் உனக்கு இங்க என்ன வேலை கிளம்பு” என மகேந்திரன் சொல்ல அதற்கு அவளோ