”மாமா யாரோ இல்லை நான்தான் ஜானகி” என்றாள் அதற்கு அவனோ
”என்ன வேணும்” என அமைதியாக கேட்டான்
”ஏன் மாமா இவ்ளோ சோகமா இருக்கீங்க என்னாச்சி உங்களுக்கு”
”எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன் ஆமா நீ என்ன வித்தியாசமா இருக்க“
“நான் அப்படியேதான் இருக்கேன் மாமா”
”இல்லையே மூர்த்திதான் உன் உசுருன்னு சொல்வ, அப்படியிருக்கறப்ப மூர்த்தியால உனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு இந்நேரம் மனசு உடைஞ்சிப் போய் வருத்தமா இருப்பன்னு பார்த்தா சந்தோஷமா இருக்க”
”ஆமாம் மாமா என்னவோ தெரியலை, மூர்த்தி இருந்தப்ப மனசு பாரமா இருந்தது அவர் போன பின்னாடி மனசு லேசாயிடுச்சி”
”ஏன்”
”ஏன்னா என்ன அர்த்தம், மூர்த்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்காக நான் எல்லா உறவுகளையும் இழந்தேன் ஆனா என் காதலை புரிஞ்சிக்காம வெறும் சொத்துக்காக வந்தவனை எப்படி ஏத்துக்கறது மாமா, அதோட ஆரம்பத்தில இருந்து மஹதி சொன்னா மூர்த்தி உனக்கு ஏத்தவன் இல்லை நீங்கதான் எனக்கு ஏத்தவருன்னு சொன்னா பாருங்க, அவள் பேச்சு அப்படியே பலிச்சிடுச்சி, கடைசியில நான் உங்ககிட்டயே வந்துட்டேன்”
”அதான் ஏன்” என்றான் எரிச்சலாக
”என்ன கேள்வி இது? ஏன் மாமா நான் உங்ககிட்ட வந்தது உங்களுக்கு பிடிக்கலையா”