(Reading time: 20 - 40 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”அத்தை” என அழைக்க மங்களம் முகத்தை திருப்பிக் கொள்ள அவரின் வெறுப்பு அவளை தீயாய் சுட்டது.

  

அவளை அன்புடன் பார்த்த அவரே இப்போது வெறுப்பாக பார்ப்பதை அவளால் ஏற்க இயலவில்லை வீரசிங்கமோ தன் மனைவியை படுக்கையில் படுக்க வைத்தார். வேங்கையனோ

  

”அம்மா” என அன்பாக அழைக்க மங்களமோ

  

”அப்படி என்னை கூப்பிடாத போ இங்கிருந்து போ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போயிடு“

  

”என்னம்மா பேசற நீ, நான் எங்க போவேன்”

  

”எங்கயாவது போ உனக்கு உன் பொண்டாட்டிதானே முக்கியம் நாங்களா முக்கியம், நீ கட்டின தாலியை தூக்கி எறிஞ்சிட்டுப் போனவளைதான் நீ ஏத்துக்குவ, உனக்காகவே வாழ வந்த சின்ன மருமகளை விரட்டுவ, அவள் இல்லாத வீடு வீடாவே இல்லை, இனி உன் பொண்டாட்டி இருந்தா நான் இருக்க மாட்டேன் போயிடு அவளையும் கூட்டிட்டுப் போயிடு“

  

”முடியாதும்மா நான் போக மாட்டேன், நான் ஏன் போகனும் இது என் வீடு எங்கப்பா அம்மா வீடு நான் இங்கதான் இருப்பேன்”

  

”அப்ப உன் பொண்டாட்டின்னு சொல்லி வைச்சியே அவளை அனுப்பு”

  

”என்னம்மா சொல்ற ஜானகியை விரட்டச் சொல்றியா, அவள் என்ன பாவம் செய்தா மனம் திருந்தி வந்தவளை ஏத்துக்கறதை விட்டுட்டு விரட்டச் சொல்ற“

  

”மூர்த்தியை பத்தி ஆயிரம் பேர் ஆயிரம் விதமா சொன்னப்ப நம்பாதவ இன்னிக்கு மூர்த்தியே சொத்துக்காகதான் ஜானகியை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சான்னு தெரிஞ்சதும் உடனே அவனை விட்டுட்டு உன்கிட்ட வந்துட்டா, நாளைக்கே அதே மூர்த்தி நான் செஞ்சது தப்புன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.