”ஏன் வந்தன்னா கொழுப்பாடா உனக்கு, இங்க வர்றதும் போறதும் என்னோட இஷ்டம் என்னை கேள்வி கேட்க இங்க யாரு இருக்கா”
”ஓஹோ கண்ணகியோட சேர்ந்து கல்லூரியை சரியாக்கலாம்னு நினைப்பா முன்னை விட இப்ப மோசமா மாறிடுச்சி”
”யார் சொன்னது போ போய் பாரு எல்லா வகுப்புலயும் பாடம் நடக்குது”
”அப்படி நடக்க வாய்ப்பில்லை”
“நடக்குதே என்ன செய்றது, என்னையும் கண்ணகியையும் கண்டதும் மாணவர்கள் திருந்தி வகுப்புக்கு போனாங்க, ஆசிரியர்களும் வேலை போயிடுமோங்கற அச்சத்தில பாடம் எடுக்கறாங்க” என சொல்ல அவனோ தவித்தான். இனி என்ன செய்வது என தெரியாமல் திணற அவனை தேடி வந்து அவனை கொத்தாக பிடித்தான் கோவலன் அவனோ அரண்டான்
”ஏன்டா டேய் உனக்கு எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, என்னை பத்தி வெளி உலகத்தில சொல்லி மானத்தை வாங்குவேன்னு மிரட்டி கண்ணகியை பணிய வைச்சிருக்க, அடேய் நீ என்னடா சொல்றது 7 மாசம் போனதும் உலகத்துக்கே என் காதல் தெரிஞ்சிடும், இப்ப என்ன எல்லாருக்கும் என் காதல் விவகாரம் சொல்லப்போறியா தாராளமா சொல்லிக்க, எனக்கு கவலையில்லை என்னை யார் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன் போ”
”இல்லை நான் அப்படி எதுவும் மிரட்டலை நான் சும்மா வந்து”
”நிறுத்துடா நீ எவ்ளோ மோசமானவன்னு எனக்குத் தெரியாதா உன்னை நண்பன்னு நம்பி இங்க வேலை கொடுத்தேன் ஆனா நீ இந்த கல்லூரியையே நாசமாக்கிட்டியே உன்னை சும்மா விடமாட்டேன்”
“உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது, என்னை விட்டுடு இல்லைன்னா என்னால உனக்கு பெரிய கஷ்டம் வரும்”