”ஓ என்னையே மிரட்டறியா ராஸ்கல்” என சொல்லி அவனது கன்னத்தில் விட்டான் ஒரு அறை அதில் சிலம்பு அவமானத்தில் பொங்கினான்
”என்னை அடிச்சிட்டல்ல இருடா இரு, உனக்கு பெரிய பிரச்சனையை நான் கொண்டு வரேன், அதுல இருந்து உன்னை காப்பாத்த அந்த கடவுளால கூட முடியாது” என சொல்ல அதே நேரம் கண்ணகி வந்தாள் அவன் சொன்னதைக் கேட்டு
”நீ செய்றதை செய் நான் இருக்கேன் அவருக்கு பக்க பலமா” என சொல்லியபடி கோவலன் பக்கம் நின்றுக் கொள்ள சிலம்புவோ குழம்பினான்
”ஓ நீங்க ஒண்ணு சேர்ந்துட்டீங்களா, சே நீங்க பிரிஞ்சிருந்தாதானே எனக்கு நல்லது எப்படி நீங்க ஒண்ணு சேரலாம், மாதவி என்ன வரமாட்டாளா இல்லை செத்துட்டாளா” என சொல்ல கோவலனுக்கு கோபம் வந்து சட்டென சிலம்புவின் சட்டையை பிடித்து
”மாதவியை பத்தி ஒரு வார்த்தை பேசின கொன்னுடுவேன் உன்னை“ என சொல்ல அவனோ இளப்பமாக சிரித்து
”ஓ இன்னும் மாதவியை காதலிச்சிக்கிட்டுதான் இருக்கியா நீ, அப்புறம் என்ன பெரிய உத்தமன் போல பேசற“
“டேய் அடங்குடா நான் எப்படியோ வாழ்ந்துட்டுப் போறேன், இனி ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது போடா வெளிய” என அவனது சட்டை காலரை பிடித்து இழுத்தபடியே வெளியேற அதைக்கண்ட ப்யூனோ இந்த அற்புத காட்சியை கல்லூரியே காண வேண்டும் என நினைத்து உடனே பெல் அடிக்க அனைவரும் என்னவோ ஏதோ என வெளியே வந்து பார்த்தார்கள்
அவர்கள் பார்க்கும் நேரம் கோவலன் சிலம்புவை பிடித்து இழுத்துக் கொண்டு சென்று கேட்டுக்கு வெளியே தள்ளிவிட அதில் அவன் தடுமாறி தரையில் விழுந்தான்