”இதப்பாரு என் காதலை கொச்சைப்படுத்தாத எனக்கும் மாதவிக்கும் நடுவில வந்தது நீதான்”
”உங்க தாத்தா உங்களை ப்ளாக் மெயில் செய்தா நீங்க என்ன செய்திருக்கனும் உடனே என்கிட்ட வந்து இது போல இது போல கண்ணகி, என் தாத்தா என்னை ப்ளாக்மெயில் செய்றாரு, ஆனா நான் மாதவியைதான் விரும்பறேன்னு சொல்லியிருந்தா, நானே கல்யாணத்தை நிப்பாட்டி மாதவியோட உங்களை சேர்த்து வைச்சிருப்பேன் தெரியுமா“
”சொல்லனும்னு நினைச்சேன் ஆனா முடியலை”
”கோழை”
”யாரு”
”நீங்கதான்”
“வேணாம் கண்ணகி இதோட சண்டையை நிப்பாட்டிக்கலாம் பேச்சு வேற எங்கயோ போகுது”
”என்ன உங்களை பத்தி உண்மை சொன்னதும் எஸ்கேப் ஆகறீங்களா, நீங்க கல்லூரிக்கே தாளாளரா இருந்தாலும் சரி கம்பெனிக்கே முதலாளியா இருந்தாலும் சரி ஏன் இந்த ஒட்டு மொத்த சொத்துக்கு உரிமையாளரா இருந்தாலும் சரி மனசுல இருக்கற விருப்பத்தை சொல்ல தயங்கற நீங்க ஒரு கோழைதான்” என கண்ணகி சொல்ல அவனுக்கு வந்ததே கோபம் வெகுண்டு எழுந்து அவளை பிடித்து உலுக்கினான் கோவலன்
”நான் கோழையா”
”ஆமாம் கோழைதான்”
”இல்லை நான் வீரன்”