”அதை ஏன் என்கிட்ட கேட்கற நீயே நேரா போய் கேட்டுக்க”
”ஓ கேட்கறேனே எனக்கென்ன பயம்” என சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென வேங்கையன் வீட்டிற்குச் சென்றாள்.
கோபத்துடன் ஒரு வேகத்தில் வந்துவிட்டாள், அங்கு வாசலில் தந்தையின் கார் இருப்பதைக்கண்டு கொதித்துப் போனாள்.
”நாமளே வேணாம்ங்கறோம், இவங்க எதுக்கு உறவு கொண்டாடப் பார்க்கறாங்க, இது தப்பு முதல்ல இவங்களை கூட்டிட்டு ஊர் போய் சேரனும்” என சொல்லிக் கொண்டே வீட்டு வாசல்வரை வந்துவிட்டாள்
பின் நின்றுவிட்டாள், தயங்கினாள், எப்படி உள்ளே செல்வது என நினைத்து கலங்கினாள், அவளின் கோபம் குறைந்தது, இது வேங்கையன் வீடு உள்ளே செல்வோமா வேண்டாமா என நினைத்து குழம்பினாள், அந்நேரம் வேங்கையன் அழகாக பாடினான்.
முத்து மணிதிறல் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச் சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
கணங்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணமும் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்