முடியும்” என சொல்ல அவளும் ஒப்புக் கொண்டாள்.
“ஓகே சார் நான் சிலம்புவை தேடிப்பார்க்கிறேன்” என சொல்ல அவரும் சரியென்றார்.
கண்ணகியோ மாதவிக்காக காத்திருந்தாள், மாதவியும் வந்து சேர்ந்தாள், வந்ததும் கோர்ட்டில் நடந்த சம்பவத்தை ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க கண்ணகியோ
”ஆண்டவன் நமக்கு துணையிருக்காரு, நமக்கு அவகாசம் கொடுத்திருக்காரு மாதவி இதை நாம நல்லபடியா பயன்படுத்திக்கனும்”
”நான் வர்ற வழியெல்லாம் யோசிச்சிப் பார்த்துட்டேன் கண்ணகி, எனக்கு எந்த வழியும் தெரியலை ஆமா நீ ஏதாவது வழி கண்டுபிடிச்சிருக்கியா”
”ஆமாம்”
”அப்படியா என்ன வழி“
”டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம்னு”
”யாருக்கு”
“மார்ச்சுவரியில இருக்கற உடம்புக்கும் உண்மையான சிலம்புவோட அப்பா அம்மாவுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன்”
”அட சூப்பர் கண்ணகி, இதை நான் கூட யோசிக்கலை உனக்கெப்படி இந்த யோசனை வந்தது
”சிம்பிள் மார்ச்சுவரியில இருக்கற உடம்பு சிலம்புவோடது இல்லைன்னு நாம நிரூபிச்சிட்டா கோவலனை வெளிய கொண்டு வரலாம்”
”ஆனா இதுக்கு சிலம்புவோட அப்பா அம்மா வேணுமே, அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியலையே“