”அந்த வேலையை உதயமூர்த்தி சார் செய்றதா சொன்னாரு”
“அப்படியா நல்லது இருக்கற கொஞ்ச நாள்ல நாம ஆளுக்கொரு வேலையை பிரிச்சி செய்வோம்”
“அதைதான் அவரும் சொன்னாரு”
”சரி இப்ப நாம என்ன செய்றது”
”உண்மையான சிலம்புவை கண்டுபிடிக்கனும்”
”அவன் எங்க இருக்கானோ என்னவோ எப்படி கண்டுபிடிக்கறது“
”கோவலன் நமக்கு வேணும்னா நாம கண்டுபிடிச்சிதான் ஆகனும் மாதவி, நீ எனக்கு உதவி செய்றியா”
”உனக்காக என் உசுரை கூட தரத்தயார், என்ன செய்யனும் சொல்லு”
”ஊட்டியிலதானே நீ அந்த சிலம்புவைப் பார்த்த“
”ஆமாம்”
”அவன்கூட யாராவது வந்தாங்களான்னு உனக்கு தெரியுமா” என கேட்க மாதவி பலமாக யோசித்தாள்
”நல்லா நிதானமா யோசிச்சிப்பாரு, ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கும், அவனோட வந்தவங்க யாரையாவது நீ பார்த்திருக்கலாம், இல்லைன்னா அவன் வந்த வண்டி இல்லை அவன் இங்க யார்கிட்டயாவது பேசினது போல, அவன் தங்கியிருந்த இடம், அது இதுன்னு ஏதாவது ஒரு சின்ன க்ளூ இருந்தா கூட போதும், அவனை தேடிப்பிடிச்சிடலாம்” என சொல்ல மாதவியோ