”எனக்கு கொஞ்சம் டைம் கொடு கண்ணகி“
”தாராளமா எடுத்துக்க” என சொல்லிய கண்ணகி மாதவியை யோசிக்க வைத்துவிட்டு அவளுக்காக உணவு சமைக்கச் சென்றாள்.
சமையல் முடிந்து மாதவியை அழைக்க வந்தாள் கண்ணகி. அப்போதும் மாதவி யோசித்தபடி இருக்க
”என்னடி இன்னுமா யோசிக்கற“
”ஆமாம் சில விவரங்களை சேகரிச்சி வைச்சிருக்கேன் பார்க்கறியா“
”சொல்லு கேட்கறேன்” என்றாள் ஆர்வமாக
”அவன்கூட யார் வந்தாங்கன்னு எனக்கு சரியா தெரியலை, அவன் மட்டுமே கூட வந்திருக்கலாம் ஆனா கார்ல வந்தான் கண்ணகி, சிவப்பு கலர் காரு வண்டி நெம்பர் கவனிச்சேன் அது ஊட்டி ரிஜிஸ்ட்ரேஷன்ல இருந்தது”
”அப்படியா அப்படின்னா அந்த வண்டி ஒண்ணு அவனோடதா இருக்கனும் இல்லை அவனுக்கு தெரிஞ்சவங்களோடதா இருக்கனும்”
”ஊட்டி பெரிசு எங்க போய் அந்த சிவப்பு கலர் காரை நீ கண்டுபிடிப்ப”
”அதுவும் கஷ்டம்தான், என்ன செய்யலாம்” என இவள் யோசிக்க மாதவி கண்ணகியின் முகத்தையே ஆர்வமாக பார்த்தாள், சட்டென கண்ணகிக்கு ஒரு யோசனை பிறந்தது
”மாதவி அவன் உன்னை தேடி ஹாஸ்டல் வந்தான்னு சொன்னல்ல“
”ஆமாம்“