(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

உங்களுக்கு, இப்ப நீங்களா கலைஞ்சிப் போகலை உங்களை நான் அடிச்சி விரட்டுவேன் போங்கடா” என மிரட்ட அதைக்கேட்டு கூட்டத்தில் இருந்த சிலர் பயந்து பின்வாங்கினார்கள் மீதி பேர் போகாமல் நிற்க ஆவுடையப்பன் தனக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்களை ஏவிவிட்டார், அவர்கள் முரடர்கள், யார் என்று கூட பார்க்க மாட்டார்கள், கட்டளையை நிறைவேற்றும் பொருட்டு அவர்கள் கூட்டத்தில் இருந்தவர்களை அடிக்கலானார்கள், அதில் சிலர் வலியில் கதறியபடியே ஓடினார்கள். அதிலும் ஈஸ்வரனோ திடமாக இருந்தான் அவனை அடித்த போதும் அசைய மறுத்தான், அவனது அந்த திடத்தைக் கண்டு மெச்சினாள் ஆண்டாள். முதல் முறை ஆண்டாள் அவனைப் பார்த்தாள், அதுவரை ஆண்டாளை ஊரே பார்த்தது கிடையாது, பெரிய வீட்டு பெண் என்ற அடிப்படையில் அவளை வீட்டிற்குள் பொத்தி பொத்தி வளர்த்திருந்தார்கள்.

  

ஆனால் போராளியாக வந்த ஈஸ்வரனோ ஆண்டாளின் அழகில் மயங்கி நின்றான், தான் வந்த நோக்கத்தை மறந்து அவளையே இமைக்காமல் பார்த்தான், அதற்காகவே அவனுக்கு நிறைய அடி உதை விழுந்தது, நன்றாக அடித்து இரத்தம் வரும் அளவு வந்தும் அவன் அசையாமல் நின்ற உறுதியைக் கண்டு ஆண்டாள் தன் தந்தையிடம்

  

”பார்த்தீங்களாப்பா என்னதான் நீங்க அடக்க முயற்சி செய்தாலும் எப்படி உறுதியா நிக்கறாங்கன்னு, இதுக்கு மேல உங்களால என்ன செய்ய முடியும்பா” என கேட்க ஆவுடையப்பனுக்கு கோபம் தலைக்கேறியது

  

ஈஸ்வரனை கொல்ல கட்டளையிட அதிர்ந்தாள் ஆண்டாள்

  

சட்டென ஈஸ்வரனை தாக்க வந்தவர்களின் முன் நின்று ஈஸ்வரனுக்கு பாதுகாப்பாக ஆண்டாள் வரவும் அந்த முரடர்கள் அதிர்ந்து ஓரமாக நின்றார்கள். ஆவுடையப்பனுக்கு பொல்லாத கோபம் வந்தது.

  

”ஆண்டாள் வா இப்படி”

  

”வேணாம்பா இந்த பாவத்தை செய்யாதீங்க, வேணாம் அப்பன் செய்த பாவம் புள்ளையை சேரும்னு சொல்வாங்க, அது போல எனக்கு பாவம் வந்துடப்போகுது, அவங்களை விரட்டுங்க, ஆனா கொல்லாதீங்கப்பா, தயவு செய்து கேட்கிறேன் அவங்களை போக விடுங்க” என

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.