(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”ம்ம் நானும் பார்த்தேன், நாம கிளம்பறப்ப நீ அவளையே பார்க்கறதும் அவளும் உன்னையே பார்க்கறதும், இதுக்கு பேரு எனக்கு தெரிஞ்சி காதல்தான்”

  

”காதலா நானா அதுவும் அவளையா”

  

”ஏன் அவளுக்கென்ன குறைச்சல் தங்கசிலையாட்டம் இருக்காளே“

  

”அதானே நாம என்ன அடிமைங்களா, ஏன் நீ அவளை ஆசைப்படக்கூடாதா என்ன“ என மற்றொரு போராளி சொல்ல அதற்கு மற்றொருவன்

  

”நிறுத்துங்கடா என்ன பேச்சு இது நம்மளோட கொள்கைகளை மறந்துட்டு ஒரு பொண்ணை பத்தி பேசறீங்க”

  

”சரி இப்ப என்ன செய்யலாம் அதைச் சொல்லுங்க”

  

”சொல்றதுக்கு என்ன இருக்கு பொறுத்தது போதும் எப்ப நம்மளை கொல்ல கட்டளையிட்டானோ இனி அவன் உயிரோட இருக்க கூடாது அவனை கொல்லனும்“

  

”யாரு ஆவுடையப்பனையா, அது நடக்கற காரியமா, அந்தாளை நெருங்க முடியாதே”

  

”எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் தூங்கறப்ப தனியாதானே தூங்கியாகனும், நடுராத்திரியில அவன் வீட்டுக்கு போய் அவனை கொன்னுட்டா எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வந்துடும், நமக்கும் விடுதலை கிடைச்சிடும் நீ என்ன சொல்ற ஈஸ்வரா” என கேட்க ஈஸ்வரனோ

  

”கொல்றது ஒரு சரியான முடிவு இல்லை நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் இல்லை அவனே பாவக்காரன், அவனை கொன்னா நமக்கும் பாவம் வந்து சேரும்“

  

”பரவாயில்லை நமக்கு பாவம் வந்தாலும் நம்மாளுங்களுக்கு விடுதலை கிடைக்கும்ல“

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.