அதனால எங்கப்பாவை விட்டுடுங்க” என கைகூப்பி கெஞ்சினாள் ஆனால் ஈஸ்வரனோ சற்று தயங்கி தயங்கியே பேசினான்
”நீ சொல்றது சரிதான் ஆனா உங்கப்பா மனம் மாறுவார்ன்னு என்ன நிச்சயம்”
”அதுக்கு ஒரு வழியிருக்கு“
”என்ன வழி“
”மேலவீதிக்கும் கீழவீதிக்கும் நடுவில இருக்கற பிரிவை கல்யாண பந்தத்தால ஒண்ணு சேர்க்கமுடியும்”
”புரியலையே“
”மேலவீதியை சார்ந்த பெண்ணை கீழவீதியை சார்ந்த ஒரு ஆண் திருமணம் செய்துக்கனும்“
”சரியா போச்சி போ அப்படி ஒண்ணு நடக்கவே நடக்காது, நடந்தா அந்த ரெண்டு பேரையும் கொல்ல ஊரே கிளம்பி வரும், அதுல முதல் ஆளா உன் அப்பா வருவாரு“
”வரமாட்டாரு“
”எப்படி சொல்ற“
”அவரோட பொண்ணையே அவர் கொல்வாரா”
”என்ன சொல்ற நீ“
”ஆமாம் ஆளுமை படைச்ச ஆவுடையப்பன் பெண்ணான என்னை நீங்க கல்யாணம் செய்துக்கிட்டா இரண்டா பிரிஞ்சிருக்கிற ஊர் ஒண்ணாயிடும்” என சொல்ல ஈஸ்வரன் வியந்தான்