(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

ஈஸ்வரன் இன்னும் அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க ஆண்டாளோ மற்றவர்களை விடுத்து ஈஸ்வரனிடம்

  

”நீங்கதான் இவங்களுக்கு தலைவரா” என கேட்க அவனும் ஆம் என்றான்

  

”உங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா நாம தனியா பேசலாமா” என கேட்க அவனோ சற்று அச்சமும் கூச்சமும் வெட்கமும் கொண்டான். கூட்டாளிகளோ அவனை போகுமாறு சொல்ல ஈஸ்வரனும் ஆண்டாள் உடன் சென்றான்.

  

ஆண்டாள் அவனை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று கதவை தாள்பாள் போட ஈஸ்வரனுக்கு திக்கென்றது

  

”என்ன செய்ற ஆண்டாள் என்னை கொல்லப்போறியா” என கேட்க அவளோ கலகலவென சிரித்து

  

”இல்லை எதுக்கு பயம் நான் பேசதான் போறேன்“

  

”என்ன பேசப்போற“

  

”எங்கப்பாவை கொல்ல முடிவோட வந்திருக்கீங்க போல“

  

”ஆமாம்“

  

“எங்கப்பாவை கொன்னுடாதீங்க அவர் மேல தப்பில்லை, இதுக்கெல்லாம் காரணம் என் பாட்டன், பூட்டன், தாத்தாதான் அவங்க வழியில வந்ததால என் அப்பாவும் அவங்களை போல மாறிட்டாரு ஆனா, அவர் நல்லவரு, அவருக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்கலாம், அவர் புரிஞ்சிக்குவாரு, அவரை கொன்னுட்டா பிரச்சனை தீராது இன்னும் பெரிசாகும், மேலவீதியாட்கள் மொத்தமா சேர்ந்து கீழவீதிங்கற ஒண்ணை இல்லாம செய்துடுவாங்க, யாருக்காக நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டீங்களோ அவங்க இல்லைன்னா என்ன செய்வீங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.