(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”இப்போ நாம அவங்களை விட்டுட்டோம்னு வையேன், அவங்களால என்ன செய்ய முடியும் சொல்லு, அவங்களுக்குன்னு தங்க சொந்த வீடு இருக்கா, போட்டுக்கற துணிமணி இருக்கா, 3 வேளை சாப்பிட சாப்பாடு இருக்கா சொல்லு, எப்படிப்பார்த்தாலும் அவங்க கூலி வேலை செய்தாதானே அவங்களால வாழ முடியும், நாம அவங்களை வாழ வைக்கிறோம் அதை புரிஞ்சிக்காம அவங்கதான் புத்திக் கெட்டு ஆர்பாட்டம் செய்றாங்கன்னா நீயுமா“

  

”அதுக்கில்லைப்பா ஊரை எதுக்காக இரண்டா பிரிக்கனும், வேணாமே எல்லாரும் ஒண்ணா இருக்கலாமே”

  

“அப்படி செய்ய முடியாது ஆண்டாளு, நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு கௌரவம் இருக்கு, நம்மளை நாலு பேரு மதிக்கனும், மரியாதை தரனும், ஊரை ஒண்ணாக்கிட்டா அவனவன் நம்மளை மதிக்க மாட்டான், நமக்கு மரியாதை தர மாட்டான், நம்மளை ஏறி நின்னு மிதிப்பான், எப்பவும் அவனுங்களை நம்ம காலுக்கடியில வைச்சிருக்கனும், அப்பதான் நம்ம கௌரவம் விட்டுப் போகாது”

  

”நீங்க சொல்றது எனக்கு பிடிக்கலைப்பா உங்க வறட்டு கௌரவத்துக்காக பாவம் ஏழை மக்களை பிரிச்சிப் பார்க்கறதும், அவங்களை அடிமைப்படுத்தறதும் தப்புப்பா” என பொங்கி எழுந்தாள் ஆண்டாள்

  

அதே நேரம் வெளியே ஈஸ்வரன் காட்டுக்கத்தல் கத்த அதை பொறுக்க இயலாத ஆவுடையப்பனோ

  

”இவனுங்களோட தொல்லை தாங்க முடியலை, இவங்க செய்றதை பார்த்துதான் நீ என்னையே எதிர்த்து பேசற முதல்ல இவனுங்களை அடக்கிறேன்” என கோபமாக சொல்லிவிட்டு வெளியே செல்ல என்னாகுமோ ஏதாகுமோ என்ற கவலையுடன் ஆண்டாளும் வெளியே வந்தாள்.

  

மகள் வருவதைக் கண்டும் தடுக்கவில்லை பார்க்கட்டும் தனது ஆளுமையை என நினைத்த ஆவுடையப்பன் தகராறு செய்ய வந்தவர்கள் முன் கம்பீரமாக நின்றார்

  

”என்னங்கடா அத்துமீறி போறீங்க, 3 வேளை கஞ்சிக்கு வக்கில்லாதப்பவே இந்த பேச்சா

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.