“விவேக் ஃபோன் செஞ்சாரா பாரதி?” என வினவினாள் கமலா!
விவேக்குடன் பேசி ஒரு நாளுக்கு மேல் ஆகி விட்டதைப் பற்றி யோசித்துக் கொண்டே,
“இல்ல அம்மா... இரண்டு வாரம் அவர் ரொம்ப பிஸியா இருப்பேன்னு சொன்னார்...” என்று கணவனுக்காக பொய் சொன்னாள் பாரதி.
அவள் சொன்னதை கேட்டு கமலாவின் முகத்தில் சிறிய நகை தோன்றியது.
“இருப்பார் இருப்பார்... ஒரு வாரம் பிஸியா இருக்காரான்னு பார்ப்போம்...!”
கமலாவிற்கு பதிலாக, பேருக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு, காய்கறிகளை நறுக்க தொடங்கினாள் பாரதி.
கமலாவை போலவே சமையலறையில் விளக்கு எரிவதை பார்த்து அவசரமாக வந்த பவித்ரா,
“நீங்க இரண்டு பேரும் என்ன செய்றீங்க?” என அவர்களை பார்த்து வினவினாள்!
“ஒன்னும் செய்யலை பவி... தூக்கம் வரலை, காஃபி குடிக்கலாம்னு எழுந்தேன்... அம்மா எழுந்திருந்த அரவம் கேட்கவே அவங்களுக்கும் காஃபி போட்டு கொடுத்தேன்... உனக்கும் ரெடி...!”
பவித்ரா பாரதியை உற்றுப் பார்த்தாள்!
பாரதி தோழியிடம் இருந்து பார்வையை திருப்பி காஃபியை ஒரு டம்ப்ளரில் ஊற்றி தோழியிடம் நீட்டினாள்!
“பயப்படாதே பவி, அண்ணாக்கு நான் காஃபி போடலை... அவருக்கு உன் கிட்ட இருந்து எஸ்கேப்பே இல்லை...“