கமலாவை பார்த்து ஒரு சின்ன புன்னகை சிந்தி விட்டு, தோழி கொடுத்த காஃபியை வாங்கி பருக துவங்கினாள் பவித்ரா.
தொடர்ந்து, பவித்ராவிற்கு சமையலில் உதவி செய்து விட்டு, “சரி பவி நான் ரூம்ல் இருக்கேன்...“ என சொல்லிவிட்டு அறைக்கு திரும்பினாள் பாரதி.
மேஜை மேல் இருந்த அவளின் செல்ஃபோன் கண்ணில் படவும், அதை எடுத்து ஒரு சில வினாடிகள் தயங்கி விட்டு, பின் விவேக்கின் நம்பரை அழைத்தாள். ரிங் போனதே தவிர அவன் எடுக்கவில்லை!
ஒரு பெருமூச்சோடு ஃபோனை கீழே வைத்தவளுக்கு அப்போது தான் ரிப்போர்ட் பற்றிய ஞாபகம் வந்தது. உடனடியாக தன் ஃபோனில் சேர்ச் செய்து விவேக்குடன் சென்ற மருத்துவமனையின் எண்ணை கண்டுபிடித்து, அழைத்தாள். அவளின் அழைப்பு உடனே எடுக்கப் படவும்,
“ஹலோ, ஒரு இரண்டு மாசத்திற்கு முன் எடுத்த டெஸ்ட் ரிசல்ட்ஸ் வாங்கனும்... இன்னைக்கு வந்தால் வாங்க முடியுமா?” என வினவினாள் பாரதி.
“கட்டாயமா மேடம்... எந்த டாக்டரை கன்சல்ட் செய்தீங்க?” என ஒரு இனிமையான பெண் குரல் விசாரித்தது!
“டாக்டர் தாமஸ்...”
“அவர் ஈவ்னிங் நாலு மணிக்கு மேல தான் இருப்பார். அவரை பார்த்து ரிசல்ட்டை காண்பிச்சு கன்சல்ட் செய்துட்டு வாங்கிக்கலாம் மேடம்...”
“ஓகே... நான் சிஸ்டர் உஷா கிட்ட பேச முடியுமா? அவங்க எத்தனை மணிக்கு வருவாங்க?”
“ஒரு நிமிஷம் மேடம்...” என சொன்னவள், ஓரு நிமிடத்திற்கு முன்பே, “உஷா சிஸ்டருக்கு இன்னைக்கு ஹாஃப் டே மேடம். அவங்களும் மூணு மணிக்கு மேல தான் வருவாங்க... நீங்க