”ஓ அப்படியா”
”என் மேல சந்தேகமா”
”சே சே அப்படியில்லை திடீர்ன்னு உங்களை என் பக்கத்துல பார்க்கவும் பயந்துட்டேன் அவ்ளோதான்”
”சாரி ஹரிணி“
”இருக்கட்டும் டைம் என்னாச்சி ஓ இவ்ளோ நேரம் தூங்கிட்டிருக்கோமே சரி பசிக்குது சாப்பாட்டை இங்கயே வரவழைக்கவா இல்லை வெளிய போய் சாப்பிடலாமா“
”ரூம்லயே அடைஞ்சிக் கிடக்கவா லண்டன் வந்தோம், வெளிய போய் சாப்பிடலாம் ப்ளீஸ்”
”ஓகே நான் ரெடியாகிட்டு வரேன்”
”இந்த ட்ரஸ் உனக்கு நல்லாயிருக்கு எதுக்கு ட்ரஸ் மாத்தனும்“
”உனக்கு ஓகேவா”
”எனக்கு டபுள் ஓகே“
”சரி நான் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவள் செல்ல தருணோ மர்மமாக சிரித்தான்.
சிறிது நேரத்தில் இருவரும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்த சாப்பிடும் இடத்திற்கு சென்று அங்கு அமர்ந்து விதவிதமான உணவுகளை ரசித்து சாப்பிடலானார்கள்
”இது போல உணவை நான் எங்கயும் சாப்பிட்டத்தில்லை ஹரிணி, ரொம்ப டேஸ்ட்டியா