இருக்கு”
”இந்த உணவுகள் இங்கதான் பிரபலம் இதை எங்கயும் சாப்பிட முடியாது தருண்”
”எனக்கு நடக்கறதெல்லாம் கனவு போல இருக்கு இந்த கனவு முடியக்கூடாது”
”ஒரு வாரத்துக்கு முடியாது தருண், என்ஜாய் பண்ணு” என சொல்லி விட்டு அவளும் சாப்பிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் ஒரு வாக் போனார்கள் லண்டனை பற்றி அவளுக்கு தெரிந்த விசயங்களை அவள் சொல்லிக் கொண்டிருக்க அதை கவனமாக கேட்டபடி இருந்தான். ஆனாலும் எரிச்சலாக இருந்தான், ஒரு கட்டத்தில் அவனால் தாங்கிக் கொள்ள இயலாமல் போனது சட்டென ஹரிணியை நிப்பாட்டினான்
”சாரி ஹரிணி நீ பேசறது எனக்கு பிடிச்சிருக்கு ஆனா, நிறைய இளங்கோவை பத்தி நீ பேசறப்ப எரிச்சலா இருக்கு“
”என்னாச்சி தருண் எனக்கே லண்டன் பத்தி எல்லாம் சொன்னது இளங்கோதான்”
”பாஸ்ட் இஸ் பாஸ்ட், இளங்கோவை மறக்க நீ முயற்சி செய்ற, நான் பவானியை மறக்க முயற்சி செய்றேன், நீ இளங்கோவை பத்தி பேசறப்ப எனக்கு பவானியோட நினைவுதான் வருது”
”ஓ சாரி தருண், நான் உன்னை காயப்படுத்திட்டேனா”
”ஆமாம் இங்க வந்தது எதுக்கு கவலையை மறக்கதானே”
”கம்பெனி விசயமா வந்தோம்”
”இருக்கட்டும் கம்பெனி விசயம் ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம கவலைகளை மறக்க இது ஒரு நல்லவாய்ப்பா அமையும் ஹரிணி, ப்ளீஸ் புரிஞ்சிக்க”