(Reading time: 26 - 52 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”ஹரிணி ஊர் சுத்தி பார்க்கலாமா”

  

”நாளைக்கு இந்தியா போகனும் இப்ப ஊர் சுத்தினா டயர்டாகிடுவோம், ப்ளைட்ல போறோம் ரிஸ்க் எடுக்க வேணாம் கம்பெனி வேலையா அலைஞ்சதுல டயர்டா இருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்” என சொல்ல தருணோ

  

”நீ ரெஸ்ட் எடு நான் ஊர் சுத்திப்பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு சென்றுவிட ஹரிணி ரெஸ்ட் எடுக்கலானாள்.

  

தருணோ ஒரு முடிவுடன் வந்தமையால் அந்த ஊரில் இருந்த கடைகளில் ஏறி இறங்கி அவளுக்காக ஒரு கவுன் வாங்கினான், அதை வாங்கிக் கொண்டு அவளிடம் வந்தான், அவளும் ஓய்வு எடுத்து முடித்து ரெடியாக இருக்க அவளிடம் அந்த உடையை தந்தான்

  

”இதப்பாரு ஹரிணி தயவு செய்து இதை பார்த்துட்டு இளங்கோவும் இப்படித்தான் எனக்கு ட்ரஸ் வாங்கித்தந்தான்னு சொல்லிடாத நான் கடுப்பாயிடுவேன்”

  

“ரிலாக்ஸ் இளங்கோ பேரை நான் எடுக்கலை ஆமா என்ன இது திடீர்ன்னு ட்ரஸ்லாம்“

  

”சும்மா ஊரை சுத்திப் பார்த்தேன் இந்த ட்ரஸ் என் கண்ல பட்டது, உடனே உன் ஞாபகம் வந்தது அதான் வாங்கிட்டேன்”

  

”இதோட விலை என்ன”

  

”என்னவாயிருந்தா என்ன போட்டுப்பாரு”

  

”ஸ்பெஷல் டேல இதை போட்டுக்கறேன்”

  

”இன்னிக்கு ஸ்பெஷல் டேதான் போட்டுக்க“

  

”அப்படியா இன்னிக்கு என்ன ஸ்பெஷல்“

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.