(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

மறுநாள் காலையில் வேலைக்கு உற்சாகமாக வந்தான் ஆனால் அங்கு ஹரிணி இல்லாமல் போக ஏமாற்றமடைந்தான், அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உதிக்க அவனும் விடுமுறை எடுத்துக் கொண்டு ஹரிணியின் ப்ளாட்டுக்குச் சென்றான்.

  

காலிங் பெல் அடிக்க சில நொடிகள் கழித்து ஹரிணி கதவு திறந்தாள், வெளியே தருண் இருப்பதைக் கண்டதும் அதிர்ந்தாள்.

  

”ஹாய் ஹரிணி” என்றான் சிரித்தபடியே

  

”ஹாய்” என்றாள் தொய்வாக

  

”என்னாச்சி உடம்பு சரியில்லையா“

  

”காய்ச்சல்“

  

”ஓ டாக்டரை பார்த்தாச்சா”

  

”பார்த்துட்டு வந்து ரெஸ்ட் எடுக்கறேன் ஆமா நீங்க இங்க என்ன செய்றீங்க”

  

”கம்பெனிக்கு போனேன் நீயில்லை அதான் உன்னை பார்க்க வந்தேன்“

  

”என்னை பார்க்க ஏன் வரனும் இதனால உங்களுக்கு ஒரு நாள் வீணாயிடுச்சே”

  

”பரவாயில்லை எனக்கு நீ ரொம்ப முக்கியமாச்சே”

  

”ப்ளீஸ் தருண் இங்கிருந்து கிளம்புங்க, நான் ரொம்ப டயர்டா இருக்கேன், நான் ரெஸ்ட் எடுக்கனும்”

  

”உன்னை தொல்லை பண்ணனும்ங்கற எண்ணத்தில நான் இங்க வரலை ஜஸ்ட் உன்னை பார்க்கலாம்னுதான் வந்தேன் வீட்டுக்குள்ள என்னை கூப்பிட மாட்டியா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.