(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தெரிஞ்ச கதைதானே, இப்ப எதுக்கு இதை சொல்றீங்க“

  

”நாளைக்கே எவனோ ஒருத்தன் நீ தனியா இருக்கறப்ப உன்கிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டா உன் மானம் போகுமே அப்ப என்ன செய்வ”

  

”நான் பத்திரமாதான் இருக்கேன், எனக்கு அப்படி ஏதும் நடக்காது”

  

”அப்படி நினைக்காத காலம் கெட்டுக்கிடக்கு, நீ வேற இங்க தனியா இருக்க, எதிர் ப்ளாட்ல இருக்கறவங்க கூட உனக்கு உதவ மாட்டாங்க, எவனாவது திட்டம் போட்டு உன்னை ஏதாவது செய்துட்டா”

  

”அப்படி ஒண்ணு நடக்கறதுக்குள்ள நான் என் வாழ்க்கையை முடிச்சிக்குவேன்”

  

”நீ ஒரு கோழை”

  

“தருண்” என கோபத்தில் பொங்கினாள்

  

”கோபப்படாத ஆண்டவன் தந்த அழகான வாழ்க்கையை நீயே முடிச்சிக்க பார்க்கிறியே, யார் உனக்கு அனுமதி தந்தா ம்ம் சொல்லு”

  

”அதுக்காக என்னை என்ன செய்யச் சொல்றீங்க”

  

”என்னை கல்யாணம் செய்துக்க, உனக்கு பாதுகாப்பா, நல்ல நண்பனா நான் இருப்பேன், கடைசி வரைக்கும் இளங்கோவை உன்னால மறக்க முடியலைன்னாலும் பரவாயில்லை, அவன் இடத்துக்கு நான் வரனும்னு ஆசைப்படலை, உனக்கு துணையா இருக்கனும்னு ஆசைப்படறேன் ஏதோ எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிட்டேன், அப்புறம் உன் விருப்பம், நல்லா யோசி உடனே பதில் சொல்ல வேணாம், நாள் இருக்கு நான் காத்திருப்பேன் ஹரிணி”

  

”உங்க வீட்ல இதுக்கு சம்மதிக்க மாட்டாங்க தருண்”

  

”மத்தவங்க சம்மதம் எனக்கு தேவையில்லை, உன் சம்மதம்தான் எனக்குத் தேவை, நீ சரின்னு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.