(Reading time: 24 - 47 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

சொன்னா இதே ப்ளாட்ல உனக்கு துணையா நான் இருப்பேன், இளங்கோ வாங்கித்தந்த ப்ளாட் இது, இதை விட்டுட்டு நீ வரமாட்ட பரவாயில்லை உனக்காக நான் இங்க வருவேன்”

  

”தருண் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”

  

”குழம்பினாதான் தெளிவு வரும், நான் கிளம்பறேன் நீயா வந்து நல்ல பதில் சொல்ற வரைக்கும் உன்னை நான் தொல்லை செய்ய மாட்டேன் பை ஹரிணி” என சொல்லிவிட்டு தருண் சென்றுவிட ஹரிணிக்கு தலையே பாரமாகிப் போனது

  

மறுநாள் ஹரிணி கம்பெனிக்கு வந்தாள் அவளைப் பார்த்தும் தருண் அவளைத் தேடி செல்லவில்லை, அவளும் தருண் இருப்பதைக் கண்டும் காணாதது போல தன் வேலையில் இறங்கினாள். அப்படியே நாட்கள் ஓடியது, இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தாலும் பார்த்தும் பார்க்காதது போல நடந்துக் கொண்டார்கள்.

  

அன்று ஹரிணிக்கு ஏகப்பட்ட வேலைகள், அதில் அவள் வீட்டிற்கு கூட செல்லாமல் கம்பெனியில் இருந்து வேலை செய்துக் கொண்டிருக்க, அவள் இருக்கிறாளே அவளுக்கு பாதுகாப்பு தரலாம் என்ற எண்ணத்தில் தருணும் இருந்தான். அவன் இருப்பதை அறியாத அதே கம்பெனியில் வேலை செய்பவன் ஹரிணியை அணுகினான். அவளிடம் அன்பாக பேசினான், பின் மிரட்டலாக பேசினான், அதை தொடர்ந்து அவளை பலாத்காரம் செய்ய முயற்சிக்க  தருண் அதைக்கண்டு பொங்கி எழுந்து ஹரிணியை காப்பாற்றி அவனை அடித்து உதைத்து வெளியே தள்ளிவிட்டு மீண்டும் ஆபிசில் உள்ள ஹரிணியின் அறைக்குச் சென்றான். நடந்தச் செயலால் ஹரிணி மிகவும் பயந்திருந்தாள் அவளின் பயத்தைக்கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தபடியே வெளியே சென்றவன்

  

”ஏன்டா இப்படி அடிக்கற வலிக்குதுடா” என ஹரிணியை பலாத்காரம் செய்ய வந்தவன் அலற அதற்கு தருணோ

  

”ஏன்டா நடிக்க சொன்னா உண்மையாவே அவளை சீண்டற, கொழுப்பா உனக்கு, நான் என்ன சொன்னேன் அவளை மிரட்ட சொன்னேன் நீ ஏன் அவளை கட்டிப்பிடிச்ச”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.