”அண்ணா உங்கப்பா பேரு ராஜகோபால் இல்லையே மோகனசுந்தரம் தானே”
”ஆமா”
”இந்த லெட்டர்ல இப்படி எழுதியிருக்கு”
”ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்”
”அண்ணா போஸ்ட்ல கூட அட்ரஸ் பாருங்க ராஜகோபால்னு தான் இருக்கு”
”அதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இருக்கும்” என அவளை பார்த்துக்கொண்டே கூறியவனை ஏற இறங்க பார்த்துவிட்டு நந்தினியிடம் பேசலானான் அர்ஜூன்
”அம்மா புண்ணியவதி யாரை பார்க்க வந்த, இங்க ராஜகோபால்னு யாருமில்லை” என கூறவும் அவளுக்கு பயம் வந்தது மெதுவாக அவனிடமிருந்த லெட்டரை வாங்கி ஒரு முறை படித்தவள் ரிஷியை பார்த்து
”அத்தான் மாமாதான் இந்த லெட்டரை எனக்கு அனுப்பினாரு” என கூறவும்
”ராஜகோபால்னு எனக்கு யாரையுமே தெரியாதே” என்றான் ரிஷி
”அப்படியா இப்ப என்ன பண்றது அத்தான்” என ரிஷியிடமே கேட்கவும் அர்ஜூனிற்கு கோபமே வந்தது
”ஏம்மா அதான் ராஜகோபால்னு யாரும் இல்லைங்கறேன் அத்தான் பொத்தான்னு கூப்பிடற முதல்ல நீ யார்னு சொல்லு” என கோபமாக கேட்கவும் அவள் தன்னை பற்றி கூறலானாள்.
”அண்ணா என் பேரு நந்தினி கன்னியாகுமரில இருந்து வரேன் என் பாட்டி பேரு உமையாள் நானும் பாட்டியும் தான் வீட்ல இருந்தோம். எங்களுக்கு யாருமில்லை. அவங்க கொஞ்ச நாள் முன்னாடிதான் இறந்து போனாங்க சாவுக்கு வந்த ராஜகோபால் மாமா நாங்க தங்கயிருந்த