(Reading time: 31 - 62 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

வீட்டை பக்கத்து வீட்டுக்காரனுக்கு கிரையம் பண்ணிட்டாரு நான் தனியா இருந்ததால என்னை வீட்டுக்கு வர சொல்லி லெட்டர் போட்டாரு.” என கூறவும் ரிஷிக்கு எங்கோ ஏதோ உதைப்பது போல் தெரியவும் அவளிடம்

  

நந்தினி

  

அத்தான்அவள் அவ்வாறு கூப்பிடும் போதே அவனுக்கு சிரிப்பு வந்தது

  

சோபாவில உட்காருஎன்றதும் அவளும் அமர்ந்தாள்.

  

இங்க பாரு நந்தினி கவனமா கேளு நீ சொல்றமாதிரி எனக்கு கன்னியாகுமரில எந்த சொந்தமும் கிடையாது ராஜகோபால்னு யாரும் கிடையாது இந்த பங்களா கூட நான் வாங்கி 2 வருஷம் ஆகுது. அதுக்கு முன்னாடி இங்க யார் இருந்தாங்கன்னு எனக்கு தெரியாது. சரி அவர் யாரு என்ன தொழில்னு தெரியுமா உனக்கு

  

அவர் இங்க ஓட்டல் வெச்சிருக்கிறதா சொன்னாங்க அத்தான்

  

”ஓட்டலா சரிவிடு கண்டுபிடிச்சிடலாம் ஆமா உன் அப்பா அம்மா எங்க

  

ரயில் விபத்தில இறந்துட்டாங்க அத்தான்என கூறவும் அவன் முகம் மாறியது அதை பார்த்த அர்ஜூனிற்கு

  

சரிம்மா உங்கம்மா அப்பா இறந்துட்டாங்க உன் மாமா தான் சாவுக்கு வந்தாரே கையோட உன்னை கூட்டிட்டு போக வேண்டியதுதானே எதுக்கு இந்த லெட்டரு

  

இல்லண்ணா நான் படிச்சிட்டு இருந்தேன் கடைசி பரிட்சை 2 நாள் முந்திதான் முடிஞ்சது அதுவரைக்கும் தங்கியிருன்னு சொன்னாரு மாமா போனதும் லெட்டர் போடறேன் அந்த அட்ரஸ்க்கு வந்து என் பையனை பாரு அவன் பத்திரமா பார்த்துக்குவான்னு சொன்னாரு அண்ணா

  

அவள் அண்ணா என கூறவும் அர்ஜூனிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.