பொய் சொன்னாங்களா??? நான் நிஜமா கிருத்திகாவே இல்லையா???”
கேட்டுக் கொண்டே போனவளுக்கு கீதா காண்பித்த திருமண ஆல்பம் நினைவில் வர,
“கல்யாண போடோஸ் எல்லாம் பார்த்தேனே... அது நான் தான்... சும்மா தானே சொல்றீங்க???” என்றாள் எதிர்பார்ப்புடன்.
அந்த குரல் தியாகராஜனை ஏதோ செய்தது...
கிருத்திகாவை நேரே பார்க்கும் தைரியம் இல்லாமல் தட்டில் இருந்த சாதத்தை அலைந்தவன்,
“அப்படி சொல்ல ஆசையா தான் இருக்கு கீர்த்தி... ஆனால் இல்லையே... நான் சீரியஸா தான் பேசுறேன்...” என்றான் அமைதியான குரலிலேயே!
“எனக்கு ஒன்னும் புரியலையே...!! ஏன் ... நான்... என்ன...”
என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறியவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,
“கீர்த்தி, ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதே...” என்றான் அக்கறையுடன்!
“சொல்றதை எல்லாம் சொல்லிட்டு அப்புறம் என்ன ஸ்ட்ரெயின் செய்யாதே மண்ணாங்கட்டி எல்லாம்???”
“அப்படி இல்லை கீர்த்தி... கல்யாணம் ஆகி கணவன் மனைவியா இருக்கிறதுன்னா என்ன? அந்த உறவுக்கு டெஃபனிஷன் இருக்கா????”
“க்கும்!!! ரொம்ப முக்கியம் நாட்டுக்கு!!! போய் டிக்ஷ்னரில தேடுங்க...”
எரிச்சலுடன் சொன்னவளை தன்னையும் அறியாமல் பார்த்து ரசித்தவன்,
“நீ இப்படி பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...” என்றான் மனதை மறைக்காமல்!