(Reading time: 7 - 13 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 20 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

திகைத்துப் போய் திரு திருவென குழந்தை போல் கிருத்திகா விழிப்பதை இமைக்காமல் பார்த்திருந்தான் தியாகராஜன்!

  

கள்ளமில்லாத சிறுக்குழந்தை போன்ற அந்த அழகிய முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது.

  

கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவனை, ஒரு பார்வையிலேயே அடித்துப் போட்டு வெற்றி பெற்றவள் அவள்!

  

யாருக்கும் பணிந்துப் போய் பழக்கமில்லாதவனை திருமணத்திற்கு பின் அவள் போட்ட ‘கன்டிஷன்’களுக்கு எல்லாம் தலையாட்டும் பொம்மையாகவும் மாற்றி வைத்திருப்பவள்!

  

கிருத்திகா காணாமல் போன அந்த ஆறு மாதங்கள், அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியாத நரகம்! நடைப்பிணம் போல தான் சுற்றினான் அவன்! கிருத்திகா தான் அவனின் உயிர்! தியாகராஜனுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.

  

அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, அவனுக்கு அவள் உயிர் தான்...!

  

கிருத்திகாவிற்கு அவனை பிடிக்காது என நினைப்பதே வலிக்க, சுயநினைவுக்கு வந்தவனாக எதிரே இருந்தவளை பார்த்தான் தியாகராஜன்.

  

அவள் இப்போதும் விழித்துக் கொண்டு தான் இருந்தாள்!

   

என்ன பார்க்குற? நான் உண்மையை தான் சொல்றேன், நீ என் மனைவி இல்லை,” என்றான் அவன்!

  

கிருத்திகா முகத்தில் இருந்த குழப்பம் மாறவில்லை! ஆனால் அவன் மூன்றாம் தடவை ஒரே விஷயத்தை சொன்னது, அவளின் வாய்ப்பூட்டை உடைத்தது!

   

நான் உங்க மனைவி இல்லையா??? அப்போ என் அம்மா, அப்பா??? அண்ணா!!! எல்லோரும்

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.