அகத்தியனுக்கும் சில பெரியவர்கள் அவனுக்கு மரியாதையாக வணக்கம் கூட வைத்தார்கள், இது என்னடா என நினைத்தபடியே ஒரு இடத்தில் வந்து இருவருமே ஒன்று போல் நின்றார்கள் ஊருக்கு மத்தியில் இரு சிலைகள் ஒன்று அகத்தியனோடது இன்னொன்னு ஆண்டாள் நாச்சியாருடையது. அந்த சிலைகளைக் கண்டதும் இவர்கள் சிலைகளாகிப் போனார்கள் காரணம் இவ்விருவரும் அவர்களை போல இருந்தார்கள்.
அகத்தியன் சிலையை பார்த்துவிட்டு அப்படியே நாச்சியாவை பார்த்து திகைத்தான்
”நாச்சியா சொல்லவேயில்லை உனக்கு கூட சிலை வைச்சிருக்காங்க“
”இது என் சிலையில்லை நாம பார்க்க வந்த கேஸ்ல இருந்தாங்கள்ல அகத்தியன் நாச்சியா அவங்களோட சிலைகள் இது”
”சரி நாம ஏன் அவங்களை போல இருக்கோம்“
”அதான் தெரியலை”
”வர்ற வழியில மக்கள் சில பேரு என்னைப் பார்த்து வணக்கம் வைச்சாங்க நாச்சியா”
”எனக்கும் அதே நிலைமைதான்”
”என்னவோ தப்பிருக்கு“
”என்ன சொல்ற“
”வா உட்கார்ந்து பேசலாம்“ என அழைக்க அவளும் அந்த சிலைக்கு பக்கமே அமர்ந்தாள்.
”சொல்லு என்ன விசயம்“
”ம் ஆமா நீ யாரு”