(Reading time: 18 - 35 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

தொடர்கதை - திருமதி அகத்தியன் - 11 - சசிரேகா

  

ன்று

  

கமிஷனர் அலுவலகத்தில்

  

”இந்த கேஸ் இருக்கே ரொம்ப தலைவலியா இருக்கு அகத்தியா, உனக்கு ஏதாவது புரியுதா” என நாச்சியா கேட்க அதற்கு அகத்தியனோ

  

”சுத்தமா புரியலை 40 வருஷத்துக்கு முன்னாடி கேஸ் இது, இப்ப போய் இதை சால்வ் பண்ண சொன்னா எப்படி, நமக்கென்ன வேற வேலையில்லையா ஏகப்பட்ட கேஸ் பென்டிங்ல இருக்கு இப்ப போய் இதை சால்வ் பண்ண கமிஷனர் சொல்றாரு கடுப்பா இருக்கு”

  

”மேலிடத்தோட உத்தரவு வேற வழியில்லை செய்துதான் ஆகனும், அந்த அம்பேத்கார் நகர் பிரச்சனை எப்ப இருந்து ஆரம்பிச்சது”

  

”சரியா தெரியலை நாச்சியா இந்த கேஸ் எடுத்ததில இருந்து எனக்கு சரியா தூக்கமே வரலை, வெறும் 40 வருஷ கதைதானே தேடி கண்டுபிடிச்சிடலாம்னு பார்த்தா எங்கெங்கயோ போகுது 1960 வரைக்கும் ரிக்கார்டுல தேடியாச்சி இனி தேட என்னால முடியாது, இப்படியே போனா வேலைக்கு ஆகாது”

  

”எதுக்கு இப்படி சிடுசிடுங்கற”

  

”பின்ன நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகலை, ஹனிமூன் ப்ளான் பண்ணி வைச்சிருந்தேன், கடைசியில இந்த கேஸ் பைலை ரிசப்ஷன்ல வந்து கொடுத்துட்டு ஹாப்பி வெட்டிங்ன்னு வாழ்த்திட்டு போறாரு அந்த கமிஷனர், இந்த கேஸ் ஃபைல் வந்ததில இருந்து நீ என்னை உன் பக்கம் கூட வரவிடமாட்டேங்கற, காதலிக்கறப்ப கூட கண்ணியமா நடந்துக்கிட்ட சரி கல்யாணம் ஆன பின்னாடியாவது ஒரு முத்தம் தருவன்னு பார்த்தா அதுக்கும் வாய்ப்பில்லாம போச்சி”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.