அகத்தியனை கண்டு நொந்த கமிஷனர் நாச்சியாவிடம்
”நாச்சியா நீயாவது எனக்கு உதவி செய்யக்கூடாதா“
”சார் நான் உங்க பக்கம்தான், இந்த கேஸை முடிக்க வேண்டியது என்னோட பொறுப்பு”
”நாச்சியா” என அலறினான் அகத்தியன்
”அகத்தியா நாம யாரு, க்ரைம் ப்ரான்ச்சில பொறுப்பான பதவியில இருக்கற ஆளுங்க, நமக்கு ஒரு வேலையை கொடுத்திருக்காங்க, நாம அதை சரியா செய்யனும் அதை விட்டுட்டு சொந்த விருப்பு வெறுப்புகளை காட்டக்கூடாது, நம்ம வேலைக்கு ஏத்த மாதிரிதான் வாழனும்”
”ம்க்கும் அவனவன் கஷ்டம் யாருக்குதான் தெரியும்” என அகத்தியன் புலம்ப
”எல்லாம் எனக்குப் புரியுது சீக்கிரமா இந்த கேஸ் முடி ஹனிமூன் போகலாம்” என்றாள் நாச்சியா அதற்கு அகத்தியனோ சலித்துக் கொண்டான்
”ஆமா போ இந்த கேஸை முடிக்க முடியுமான்னே தெரியலை, ரிக்கார்டு ரூம் சுத்தம் செய்றப்ப மூலையில கிடந்த ஃபைலை தூசு தட்டி எடுத்து நம்ம கிட்ட மேரேஜ் கிப்டா கொடுத்திருக்காரு கமிஷனர் இந்த கேஸை யாராலயும் முடிக்க முடியலை நம்மால மட்டும் முடியுமா என்ன”
“முடியும்னு சார் நம்பறாரு, முயற்சி செய்யலாமே இந்த கேஸ்ல எவ்வளவு டீடெய்ல்ஸ் இருக்குப் பார்த்தியா அதுல முக்கியமா அகத்தியன் நாச்சியார்ன்னு பேர் சம்பந்தப்பட்டிருக்கு“
”அவங்க யாருமே இப்ப உயிரோட இல்லை“ என அகத்தியன் சொல்ல அதற்கு நாச்சியா
”ஆமா அவங்களுக்கு என்னாச்சிங்கறதுதான் இப்ப கேள்வியே ,அதுதானே இந்த கேஸ் இதை முடிக்கலைன்னா எப்படி”
”அய்யோ உன்னை போல சின்சியரான போலீசை நான் கல்யாணமே செய்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ண வைச்சிடாதம்மா, தாயே இப்ப நான் என்ன செய்யனும் அதைச் சொல்லு”