(Reading time: 18 - 35 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”வழக்கம் போல தனித்தனியா பிரிஞ்சிப் போய் ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பார்க்கலாம் ஓகேவா“

  

”டபுள் ஓகே நான் நடந்து போறேன் நீ வண்டியில போ ஆமா நீ எந்த பக்கம் போற“

  

”வழக்கம் போல நான் கிழக்கு பக்கம் போறேன்“

  

”அப்ப நான் மேற்கு பக்கம் போறேன் மதியம் ஒரு மணிக்கு இதே இடத்தில நாம சந்திக்கறோம் சரியா ஒருவேளை நீ எங்கயாவது போகனும்னா கூட போன்ல என்கிட்ட சொல்லிட்டு போ நானும் அதே போல செய்றேன் சரியா“

  

”ம் சரி ஜாக்கிரதை அகத்தியா, சின்ன விசயமா இருந்தா கூட அது நமக்கு ரொம்ப பயன்படலாம்“

  

”இதை வேற நீ எனக்கு சொல்லனுமா எல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ பத்திரமா இரு“

  

”எனக்கொண்ணும் பயமில்லை“

  

”நிறைய பேரை காவு வாங்கின ஊர் இது நம்மளையும் காவு கொடுத்துட போறாங்க”

  

”சே சே இருக்காது மதியம் சந்திக்கலாம் பை அகத்தியன்” என சொல்லிவிட்டு அவள் பைக் ஓட்டிக் கொண்டு கிழக்கு பக்கமாக செல்ல அகத்தியனோ

  

”எவ்ளோ ஸ்டைலா வண்டி ஓட்டறாளே, எப்படியாவது இந்த கேஸ் முடிச்சிட்டு இவளை ஹனிமூன் கூட்டிட்டு போகனும், ஹனிமூனுக்காகவாவது இந்த கேஸ் முடிக்கனும் முடிச்சிக்காட்டறேன்” என சபதம் எடுத்துக் கொண்டு மேற்கு பக்கமாக சென்றான் அகத்தியன்.

  

நாச்சியா ஊருக்குள் சென்றாள், அவளை எல்லாரும் வினோதமாகப் பார்த்தார்கள், சில பெரியவர்கள் வயதில் மூத்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள், அதே நிலைமைதான்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.