“பிரின்சஸ்...! தியாகு பத்தியும் ஞாபகம் இல்லைன்னு ஃபீல் செய்றீயா என்ன? இது எல்லாம் டெம்பரரி தான்டா... டாக்டர் சொல்லி இருக்கார் சீக்கிரமே உனக்கு எல்லாம் ஞாபகம் வந்திரும்ன்னு...”
“ப்ச்...”
“நான் சும்மா சொல்லலை... உனக்கு இப்படி இருக்கும் போது நான் சும்மா இருப்பேனா? இன்டர்நெட்ல நிறைய கேசஸ் தேடி பார்த்தேன்... சென்னையிலேயே ஏழு டாக்டர் கிட்ட பேசிட்டேன்... எல்லோரும் உன்னோட வேரூர் டாக்டர் சொனதை தான் சொல்றாங்க... பழகுன இடத்துல இருக்க இருக்க, உனக்கே மெல்ல நினைவுகள் திரும்புமாம்... தேவை இல்லாம ரொம்ப ஸ்ட்ரெயின் செய்து யோசிக்க கூடாதாம்...”
“ம்ம்ம்ம்ம்ம்... நீங்க ஈசியா சொல்லிட்டீங்க, என் நிலைமை எனக்கு தானே தெரியும்... ரோட்டுல போறவங்க வரவங்களை எல்லாம் நேரா பார்க்கவே தயக்கமா இருக்கு... யாரு தெரிஞ்சவங்க, யாரு தெரியாதவங்க ஒன்னும் புரியலை... என் சொந்த அம்மா அப்பாவை கூட எனக்கு தெரியலை... எல்லோருமே அந்நியமா தான் தெரியுறாங்க...”
பேசும் போதே, ராஜிடம் அப்படி அவன் அந்நியன் என்ற உணர்வு அவளுக்கு வரவே இல்லையே, என்பது அவளின் நினைவுக்கு வந்தது!
கிருத்திகா அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, விஜய் அவளை மீண்டும் சமாதானப் படுத்த முயன்றான்.
“எல்லாம் சரி ஆயிடும் பிரின்சஸ், கம் ஆன் சியர் அப்...”
கிருத்திகா விஜயை யோசனையுடன் பார்த்தாள்...
இவனிடம் இருந்து முழுவதுமாக இல்லை என்றாலும், முடிந்த அளவில் ‘கிருத்திகா’வை பற்றி தெரிந்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டு,