(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

  

என்னத்த சியர் செய்ய? எனக்கு தான் ஞாபகம் இல்லை... நீங்க எல்லோருமாவது எனக்கு என்ன ஏதுன்னு எடுத்து சொல்லலாமே... அதை கேட்டாவது எனக்கு ஞாபகம் வராதா???” என்று சின்ன தூண்டிலுடன் விஜய்க்கு பதில் அளித்தாள் அவள்.

  

இல்லை பிரின்சஸ்... கிரிட்டிகல் சிச்சுவேஷன் வந்தால் நானே சொல்றேன்னு சொல்லி இருக்கேனே... மத்தபடி டாக்டர்...”

  

போங்கண்ணா... இதையே தான் சொல்றீங்க... பொதுவா ஏதாவது சொல்லுங்க... ப்ளீஸ்...” கிருத்திகா குரலில் மட்டும் அல்லாமல் முகத்திலும் கெஞ்சும் பாவனையை வைத்துக் கேட்டாள்!

  

பிரின்சஸ்...”

  

ப்ளீஸ்ண்ணா...”

  

விஜய் மறுக்க, கிருத்திகா கெஞ்ச, மெல்ல விஜயின் மனம் கரைந்தது...

  

ஓகே, உனக்கு நம்ம ஃபேமிலி பத்தி வேணா சொல்றேன்...”

  

சொல்லுங்க...” என்றாள் அவள் ஆர்வத்துடன்.

  

வா, அப்படி உட்கார்ந்து பேசுவோம்...” என்றபடி அந்த லைப்ரரியின் முன் இருந்த மரத்தடி பெஞ்ச் நோக்கி நடந்தான் விஜய்.

  

அவனை பின் தொடர்ந்து சென்று அவனருகில் அந்த பெஞ்சில் அமர்ந்தாள் கிருத்திகா.

  

ஒன் செகன்ட் பிரின்சஸ்... நான் வர லேட்டாகும்னு மெசேஜ் அனுப்பிடுறேன்...” என அவளிடம் சொல்லிவிட்டு மொபைல் ஃபோனுடன் சில மணித்துளிகள் மல்லுக்கட்டியவன், பின் அதை பாக்கெட்டினுள் வைத்து விட்டு,

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.