(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”தருண் என்னாச்சி உங்க கையில கட்டு போட்டிருக்கீங்க”

  

”ஓ இதுவா இது அந்த போட்டோவை எடுத்தப்ப கையில அடிபட்டிச்சி”

  

”ஓ சாரி சாரி தருண்”

  

”இட்ஸ் ஓகே இதெல்லாம் ஒரு காயமா, தன்னால சரியாயிடும்”

  

”ரியலி நீங்க கிரேட் தருண்” என சொல்ல அவனோ ஆசையாக அவளிடம் வர அவளோ

  

”நான் பிரெஷாகி வரேன்” என சொல்லிவிட்டு தன் அறைக்குச் செல்ல அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனோ அவள் வருவதற்குள் இரண்டாக இருந்த அறையை ஒன்றாக்கியிருக்க அந்த மாற்றத்தை வெறுத்தாள் ஹரிணி

  

”இதெல்லாம் உன் வேலைதானா, ரூமை ஒண்ணாக்கிட்டா உன்னை நான் ஏத்துக்குவேன்னு நினைச்சியா இரு உன்னை வெறுப்பேத்தறேன்” என நினைத்தவள்

  

”தருண் தருண்” என அழைக்க தருண் அவளின் அழைப்புக்காக காத்திருந்தவன் போல சென்றான்.

  

”சொல்லு ஹரிணி”

  

”என்ன இதெல்லாம் உன்னோட திங்க்ஸ்லாம் இந்த ரூம்ல வைச்சிருக்க”

  

”நமக்கு கல்யாணம் ஆயிடுச்சி, நாம ஒண்ணா ஒரு ரூம்ல இருக்கனும் அதானே முறை”

  

”இருக்கலாம் ஆனா உடனே இப்படியொரு மாற்றத்தை என்னால ஏற்க முடியலை”

  

”அப்படியில்லை நீ கொஞ்ச கொஞ்சமா மாறனும்ங்கறதுக்காகத்தான் இவ்வளவும் செய்தேன், இப்படியிருந்தா நிச்சயம் கொஞ்ச நாள்ல உன் மனசு மாறிடும்”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.