(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”நான் இதை சொல்லலையே எதுக்காக இதைக் கொண்டு வந்த எடு இதை” என சொல்ல அவனோ

  

”நீங்க எப்ப வந்தாலும் இதைதான் தர சொல்லி ஹரிணி மேடம் சொல்லியிருக்காங்க சார்” என சொல்ல அவனுக்கு சாப்பிடும் எண்ணமே போய்விட்டது, சாப்பிடாமலே கொண்டு வந்த உணவுக்கு பணம் அளித்துவிட்டு பசியுடன் அங்கிருந்து கிளம்பி பைக்கில் பயணம் செய்து ஒரு கையேந்தி பவனிடம் நின்றான். அங்கு சுவையாக இருந்த உணவுகளை சாப்பிட்டு தனது பசியை போக்கினான் பசி போனதும் பவானியின் நினைவு வந்தது

  

ஒருநாள் பவானியிடமும் இதே போலதான் தருண் நடந்துக் கொண்டான்

  

”சாரி பவானி கல்யாணத்தை சாக்கா வைச்சி நீ சொல்றது எனக்குப் புரியுது ஆனா நம்ம எம்டிக்கு இதெல்லாம் புரியுமா சொல்லு, உனக்காக நான் அவர்கிட்ட போய் சிபாரிசு பேசினா என் இமேஜ் என்னாகிறது, அதை விட நீ இருந்து உன்னோட வேலைகளை முடிச்சிட்டு வீட்டுக்கு வா”

  

”ஆனா இப்பவே மணி 8 ஆகுது பென்டிங் வேலைகளை முடிக்க எவ்வளவு நேரம் ஆகுமோ, அதுவரைக்கும் இந்த ஆபிஸ்ல எப்படி நான் தனியா இருக்கறது”

  

”அது உன்னோட பிரச்சனை, நான் வீட்டுக்கு கிளம்பறேன்”

  

”ப்ளீஸ் தருண் எனக்காக இருக்க கூடாதா என் வேலை முடிஞ்சதும் நாம ஒண்ணா போகலாமே”

  

”வீட்லதான் நாம கணவன் மனைவி, இங்க நான் ஹெச் ஆர், நீ எனக்கு கீழே வேலை செய்ற, அதனால நான் சொல்றதை செய்” என சொல்ல அவளோ

  

”எனக்கு தனியா இருக்க பயமாயிருக்கு தருண்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.