”இல்லை இல்லை பிரிவா எதுக்கு வரனும், ஒண்ணும் பிரச்சனையில்லை எனக்கு இந்த துணியே ரொம்ப பிடிச்சிருக்கு, இனி இளங்கோவோட உடைமைகளை நான் பயன்படுத்திக்கிறேன் போதுமா, உனக்கு சந்தோஷம்தானே”
”முழு திருப்தி” என அவள் சொல்லிவிட தருணோ
”டின்னர்க்கு வெளிய போகலாமா“
”கண்டிப்பா நான் ட்ரஸ் சேன்ஜ் பண்ணிக்கிறேன், நீங்களும் போய் இளங்கோவோட ட்ரஸ் உடுத்திட்டு வாங்க, அவன் நிறைய பார்ட்டிக்குன்னு நல்லா கிராண்டா ட்ரஸ் எடுத்து வைச்சிருப்பான், அதை போட்டு பாருங்க உங்களுக்கே பிடிக்கும்”
”சரி பார்க்கறேன்”
”இங்கயா சாரி தருண், இன்னும் நான் உங்களை ஏத்துக்கலை அதனால நீங்க கொஞ்சம் பக்கத்து ரூம்ல போய் ரெடியாகறீங்களா ப்ளீஸ்”
”ஓ புரியுது புரியுது நான் போறேன்” என சொல்லிவிட்டு தருண் சென்றுவிட ஹரிணிக்கு மனம் குதூகலமாக இருந்தது.
சிறிது நேரத்தில் ஹரிணி அழகாக ரெடியாகி வந்தாள், தருணும் இளங்கோவின் கோட் சூட் அணிந்தபடி வேண்டா வெறுப்பாக வர அவளோ அதைக் கண்டு உடனே
”வாவ் நீங்க இதுல அப்படியே இளங்கோ போலவே இருக்கீங்க தருண், என்னை இளங்கோவா நினைச்சிக்கன்னு ஒரு பேச்சுக்கு நீங்க சொன்னீங்க ஆனா, உண்மையாவே நீங்க இளங்கோ போலவே வாழ ஆரம்பிச்சிட்டீங்க, எனக்கு இது போதும் தருண் இது போதும்” என சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்.
அந்த அணைப்பில் உருகி தானும் அவளை அணைக்க முற்பட அவளோ