”இளங்கோ இந்த பெர்ப்யூம் வாசம் என்னை மயக்குது” என ஹரிணி சொல்ல அவளை அணைக்கும் எண்ணம் அறவே நீங்கி அவளை விட்டு விலகி
”நான் தருண் ஹரிணி, இளங்கோ இல்லை”
”சாரி சாரி அந்த பெர்ப்யூம் வாசம் வந்ததும் நான் கொஞ்சம் தடுமாறிட்டேன் சாரி ஹர்ட் ஆயிட்டீங்களா”
”சே சே இல்லைல்ல வேணும்னா நீ அப்படி சொன்ன, அதோட கொஞ்ச நாள்தானே எல்லாம் மாறிடும் போலாமா” என அவளை அழைக்க அவளும் அவனுடன் இணைந்து சென்றாள்.
நேராக ஹரிணியே அவனை ஒரு ஓட்டலுக்கு அழைததுச் சென்றாள். அடிக்கடி ஹரிணியும் இளங்கோவும் அங்கு வருவது வழக்கம் என்பதால் அவளை அனைவரும் அறிந்திருந்தார்கள். அவள் வரவும் அன்புடன் வரவேற்றார்கள் கூடவே தருணையும் வரவேற்றார்கள்
”வாங்க மேடம் வாங்க சார் வாங்க வாங்க ரொம்ப நாளாச்சி இங்க வந்து உட்காருங்க சார் உட்காருங்க மேடம் இருங்க உங்களுக்கு பிடிச்சதை கொண்டு வரேன்” என பேரர் ஒருவன் அவனாக சொல்லிவிட்டு சென்றுவிட தருணுக்கு திக்கென்றது
”என்ன ஹரிணி இவனா வந்தான் என்னவோ பேசினான் உடனே போயிட்டான் என்ன நடக்குது இங்க”
”ஒண்ணுமில்லை தருண் இந்த ஓட்டல் நானும் இளங்கோவும் அடிக்கடி வந்து போற இடம், நாங்க அதிகமா எதை சாப்பிடுவோம்னு இங்க இருக்கற எல்லாருக்கும் தெரியும் அதான் அவங்க அப்படி உரிமையா நடந்துக்கறாங்க, இதையெல்லாம் தப்பா நினைக்காத தருண் ரிலாக்ஸ்”
”உனக்கு வேற ஓட்டலே கிடைக்கலையா ஹரிணி“
”இது எங்களோட பெஸ்ட் அண்டு பேவரிட் ஓட்டல் தருண்“