(Reading time: 22 - 43 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

எதுக்கு செய்றேன்னு எனக்கு நல்லாவே தெரியும், உன்னோட எண்ணம் என்னிக்குமே பலிக்காது, நான் செய்ற டார்ச்சர்ல நீ உன் தவறுகளை உணரனும் உணரவைப்பேன்” என மனதில் நினைத்தவள் சட்டென அவனைப் பார்த்து

  

”இளங்கோ” என அழைக்கவும் அதிர்ந்தான் தருண் உடனே அவள் தன் நாக்கை மெதுவாக கடித்துக் கொண்டு

  

”சாரி சாரி நான் ஏதோ கவனத்தில அப்படி கூப்பிட்டுட்டேன்”

  

”பரவாயில்லை தெரியாமதானே கூப்பிட்ட”

  

”ஆமாம்”

  

”சரி சொல்லு எதுக்கு கூப்பிட்ட”

  

”சாப்பாடு உனக்கு பிடிச்சிருக்கா”

  

”எது இதுவா ஓஓ ரொம்ப நல்லாயிருக்கு, என் லைப்ல நான் சாப்பிடாததை இப்ப சாப்பிடறேன் ஐ லவ் இட்”

  

”எனக்கு தெரியும் கண்டிப்பா உனக்கு இது பிடிக்கும்னு, எப்படி இளங்கோவோட உடைகள் உனக்கு பிடிச்சிருக்கோ அதே போல அவனுக்கு பிடிச்ச உணவும் உனக்கு பிடிக்கும்னு கெஸ் பண்ணேன், ஒர்க் அவுட் ஆயிடுச்சி, எனிவே இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு எங்க நீ இந்த சாப்பாடை பிடிக்கலைன்னு சொல்லிடுவியேன்னு நினைச்சி பயந்தேன்“

  

”அப்படி நான் சொல்லியிருந்தா, நீ என்ன செய்திருப்ப ஹரிணி”

  

”வருத்தப்பட்டிருப்பேன், இளங்கோ இடத்தில உன்னால வரமுடியாது தப்பான முடிவு எடுத்து கல்யாணம் செய்துக்கிட்டோம்னு நினைச்சி வருத்தப்பட்டிருப்பேன், அந்த எண்ணம் வந்தாலே நம்ம வாழ்க்கை நல்லபடியா இருக்காது தருண்” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான் தருண்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.