”ஆஹா இவள்கிட்ட ஜாக்கிரதையாவே பழகனும், எந்த ஒரு நேரத்திலும் இவளுக்கு தப்பான முடிவு எடுத்து கல்யாணம் செய்துக்கிட்டோம்னு நினைப்பு வரவே கூடாது அதுதான் முக்கியம்” என நினைத்தவனுக்குள் என்னவோ தோன்றியது.
”பவானி எனக்குத் தெரியும், நிவேதினி பணக்கார வீட்டுப் பொண்ணு, நீ சாதாரண மிடில் க்ளாஸ் பொண்ணு, அவளோட சாப்பிடற டேஸ்ட் வேற, உன்னோட டேஸ்ட் வேற, எதுலயும் உன்னால அவள் அளவுக்கு வரமுடியாது இருந்தாலும் எனக்காக உன்னை நீ மாத்திக்கனும் அப்பதான் என்னால உன்னை ஏத்துக்க முடியும் ப்ளீஸ் சாப்பிடு” என சொல்ல பவானியோ உள்ளுக்குள் கதறிக்கொண்டே வெளியே காட்டிக் கொள்ளாமல் பிட்சா துண்டு ஒன்றை சாப்பிட பிடிக்காமல் சாப்பிட்டாள்
”நிவேதினிக்கு இந்த சீஸ் பிட்சான்னா உயிர், அடிக்கடி சாப்பிடுவா அவள் கோபமா இருக்கறப்ப அவளை சமாதானம் செய்யவே, நான் இந்த பிட்சாவை வாங்கிட்டுப் போய் தருவேன், இதை பார்த்ததும் அவளோட கோபம்லாம் பறந்துடும் தெரியுமா” என அவன் சொல்லும் போதே பவானிக்கு வாந்தி வருவது போல இருக்க அவள் உடனே ரெஸ்ட்ரூம் சென்று வாந்தி எடுத்துவிட்டு வந்து நின்றாள். அவளைக் கண்டதும் கோபம் கொண்ட தருணோ
”இதுக்குதான் இதுக்குதான் நான் இந்த கல்யாணமே வேணாம்னு சொன்னேன், கேட்டியா இப்ப பாரு என் மனசை உடைச்சிட்ட, இப்ப உனக்கு சந்தோஷமா அவள் இடத்தில உன்னை வைச்சி பார்த்தலாவது உன்னை ஏத்துக்க முடியும்னு நம்பினேன் ஆனா, எனக்கு இப்ப அந்த நம்பிக்கை சுத்தமா இல்லை போச்சி எல்லாம் போச்சி அவ்ளோதான்” என சொல்ல பவானி பயந்தாள்
”இல்லை தருண் இப்ப பாருங்க நான் சாப்பிடறேன்“
”எதுக்கு மறுபடியும் வாந்தி எடுக்கவா”
”இல்லை அது ஏதோ தெரியாம ஆனா இப்ப பாருங்க எனக்கு வாந்தி வராது, ப்ளீஸ் கோபம் வேணாம் ப்ளீஸ்” என சொல்லிவிட்டு மீண்டும் அதே சீஸ் பிட்சாவை சாப்பிடலானாள் அவளுக்கு வாந்தி வருவது போல் இருந்தும் அடக்கிக் கொண்டு கஷ்டப்பட்டு சாப்பிட்டு