“தெரியலை பெரியப்பா, இந்த அர்ஜூன் ஏதோ பேசினான் அதுக்கப்புறம்தான் அண்ணாவுக்கு கோபமே வந்து மீட்டிங்கை கெடுத்துட்டாரு. மீட்டிங்கையும் அடுத்த வாரம் தள்ளி வைச்சிட்டாங்க”
“சரி சரி நீ ரிஷியை கூட்டிட்டு வா நான் அர்ஜூன்கிட்ட பேசறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்தவர் அடுத்து அர்ஜூனுக்கு போன் செய்தார். அர்ஜூனோ மீட்டிங் முடிந்த நிலையில் நந்தினிக்காக போன் வாங்க கடைக்கு சென்றிருந்தான். அந்நேரம் போன் வரவும் அவசரமாக போன் பேசினான் அர்ஜூன்
”ஹலோ”
“நான் தான்டா பேசறேன் எங்க இருக்க” என மோகனசுந்தரம் கேட்க
“கடையில இருக்கேன்”
“சரி ரிஷிக்கு என்னாச்சி”
“என்னைக் கேட்டா எனக்கு என்ன தெரியும்”
“டேய் அடிவாங்காத உனக்கு தெரியாம ஏதாவது இருக்குமா? என்ன ஆச்சின்னு சொல்லு”
”என்ன ஆகனும் காலா காலத்துல ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைச்சிருந்தா அண்ணாவும் சந்தோஷமா இருந்திருப்பாரு, அவரை நீங்க பட்டினி போட்டு வளர்த்துட்டு இப்ப அவர் மீது கோபப்பட்டு என் மேல ஏன் கோபத்துல பாயறீங்க” என அர்ஜூன் வில்லங்கமாக பதில் சொல்லவும்
”ஏண்டா நானாடா அவனை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொன்னேன் அவன்தானே வேணாம்னு சொல்றான்.”