”இல்லைண்ணா பெரியப்பா உங்களை கையோட வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு”
“எதுக்கு”
“நீங்க கோபமா இருக்கீங்கள்ல அதான் பேசி உங்க கோபத்தை குறைக்கலாம்னு”
“தேவையில்லை நீ கிளம்பு நான் அப்புறமா வந்து பார்க்கறேன், இப்ப எனக்கும் அர்ஜூனுக்கும் முக்கியமான வேலையிருக்கு”
“என்ன வேலைண்ணா” என அர்ஜூன் கேட்க
”அது சும்மா வந்து கொஞ்சம் மனசு சரியில்லை அதான் கெஸ்ட் ஹவுஸ் போலாம்னு”
“அய்யோ அண்ணா என்னால இப்ப வரமுடியாது சாரிண்ணா” என அர்ஜுன் அலற
“ஏன் எங்க போற தங்கச்சியை பார்க்கவா”
“அவளை பார்க்க இப்ப போனாலும் விடமாட்டாங்க விசிட்டிங் ஹவர் நைட் 7 - 8 தானாம்”
“ஓ அப்படியா சரி இப்ப எங்க கிளம்பிட்ட”
“நான் பேங்குக்கு போறேன்”
“எதுக்கு”
“தங்கச்சிக்கு செலவுக்கு பணம் தரவேணாமா அதான் அவள் பேர்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி ஏடிஎம் கார்டு தரலாம்னு இருக்கேன்”
“ஓ சரி வா நானும் வரேன்”