(Reading time: 11 - 22 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”அகத்தியனுக்கு என்னாச்சி நாச்சியா” என கேட்டபடியே அவளைப் பார்த்து அதிர்ந்தான். வயதான நாச்சியா அங்கு நின்று கமிஷனரையே கோபமாக முறைத்தபடி இருந்தாள்.

  

”நாச்சியா நாச்சியா நீ நீயா” என காபியை தன் மேலே கொட்டிக் கொண்டு எழுந்து நின்றான் கமிஷனர்

  

”வா வா உனக்காகதான் நான் இத்தனை நாளா காத்திருந்தேன், நீயா வந்து மாட்டிக்கிட்ட” என சொல்ல அதிர்ச்சியில்

  

”யார் நீ”

  

“இன்னுமா என்னை உனக்குத் தெரியலை இல்லை உனக்கே நீ யார்ன்னு தெரியலையா நான்தான் ஆண்டாள் நாச்சியா”

  

”ஆவுடையப்பன் பொண்ணு” என கமிஷனர் சொல்ல அதற்கு ஆண்டாள் நாச்சியா

  

”பரவாயில்லையே ஞாபகம் வைச்சிருக்கியே ஆமா என்ன இந்த பக்கம் அந்த உயிலுக்காகதானே வந்த, அது பத்திரமா இருக்கு, உன்னால அதை கண்டுபிடிக்கவே முடியாது, இத்தோட நிறுத்திக்க அதான் உனக்கு நல்லது” என கடுமையாகச் சொல்லவும் அதுவரை பயந்தபடி இருந்த கமிஷனர் சட்டென இளப்பமாக சிரித்துவிட்டு

  

”என்னடி பேயா வந்து பயமுறுத்தறியா, அப்படிப்பார்த்தா எனக்கும்தான் பேய் பிடிச்சிருக்கு பார்க்கறியா” என சொல்லியபடியே சட்டென கமிஷனர் இரு உருவமாக பிரிந்தார். ஒரு உருவம் கார்கோடகனாகவும் இன்னொரு உருவம் சங்கமேஸ்வரனாக மாறியது.

  

அதைக்கண்டு நாச்சியா நக்கலாக சிரித்துவிட்டு 3 உருவமாக பிரிந்து நின்றாள், அதைக்கண்டு சங்கமேஸ்வரன் அதிர்ந்தான்

  

”இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருப்ப, திருந்த மாட்டியா” என நாச்சியா கேட்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.