”பொய் பொய் சொல்ற கார்மெண்ட்ஸ்க்கு தீ பிடிச்ச விசயம் கேள்விப்பட்டதும் நானும் அகத்தியனும் வந்தோம், பின்னாடியிருந்து எங்க தலையில கட்டையால அடிச்சி எரிஞ்சிக்கிட்டு இருக்கற கார்மெண்ட்ஸ்க்குள்ள தூக்கிப் போட்டு போனது நீதானே, எனக்கு நல்லாவே தெரியும் அது நீதான்” என சொல்ல அதற்கு கார்கோடகன்
”சத்தியமா அது நான் இல்லை” என சொல்லி முடிக்க சங்கமேஸ்வரன் பேசினான்
”அது என்னோட வேலைதான், கார்கோடகனுக்கு எதுவும் தெரியாது அவன் வெறும் கார்மெண்ட்ஸ் மட்டும்தான் எரிச்சான், அதோட அவனோட கோபம் ஆத்திரம் தீர்ந்துடுச்சி ஆனா, எனக்கு மனசு ஆறலை சட்டுன்னு பேயா அவனுக்குள்ள நுழைஞ்சேன் நீங்க வந்ததை பார்த்து அவனை வைச்சி உங்க தலையில அடிக்க வைச்சி அவனை வைச்சே உங்களை கார்மெண்ட்ஸ்க்குள்ள தூக்கி எறிய வைச்சேன் எது எப்படியோ நீங்க ஒழிஞ்சீங்க, என்னோட ஆத்திரமும் அடங்கிடுச்சி”
என சொல்ல ஆண்டாள் நாச்சியாவோ
“கார்கோடகன் தான் செய்த தப்பால அவனோட மேலவீதியாளுங்களாலயே கல்லடிபட்டு செத்தான், அவன் செஞ்ச தப்புக்கு இந்த தண்டனை தேவைதான் ஆனா எப்படி அவனால மறுபிறவி எடுக்க முடிஞ்சது“
என கேட்க அதற்கு கார்கோடகன்
”தீராத ஆசை இருக்கறவரைக்கும் எப்படி என்னோட ஆத்மா சாந்தியாகும்”
“100 பேரை கொன்னுமா உன் ஆசை அடங்கலை“
”என் ஆசையே வேற”
”என்னது அது”